பரிகார ஸ்தலங்கள்

​இதுவரை அமாவசை என்பது என்ன ?கிரகணம் என்பது என்ன ?இதை சோதிட நூல்கள் எப்படி சொல்கிறது ,இதில் பிறந்தவர்கள் பற்றி என்ன சொல்ல படுகிறது என்று விவரமாக பார்த்து புரிந்து வந்தோம் ,

சில அன்பர்கள் அமாவசை அல்லது கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பரிகாரம் செய்தால் மேன்மை அடைவார்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் ,

அவர்களுக்கும் உங்களுக்கும் இந்த பதிவு ……

அமாவாசையில் சூரியன் பலமாக இருக்கும் ,

பௌர்ணமியில் சந்திரன் பலமாக இருக்கும் என்று ஒரு பதிவில் சொல்லி இருந்தேன் ,

ஆன்மாக்கள் சூரியன் என்று சோதிட நூல்கள் சொல்கிறது ,பலமான 

சூரியன் இருக்கும் வேளையில் ஆவி உலகில் இருக்கும் ஆன்மாக்கள் பூமிக்கு வரும் நாள் அமாவசை ,

இப்படி வரும் நாளில் ஆண் பிள்ளைகள் எள்ளுநீரை கட்டை விரலால் அவர்களுக்கு கொடுக்க 

அவர்களுக்கு பசி தாகம் அடங்குகிறது என்று கருட புராணம் சொல்கிறது .

அமாவாசையில் பிறந்தவர்கள் முன்னோர்களின் ஆசிகளை பெற்றவர்கள் 

இவர்களை பெற்றவர்கள் அவர்களுடைய பெற்றோர்களுக்கு(தாத்தா-பாட்டி) திதி கொடுக்காமல் 

இருந்தால் அந்த சாப வேதனை இவர்களை தாக்கும் ,

இதனால் இவர்களுக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைக்காமல் போகும் ,

எத்தனை முயற்சி நல்ல படிப்பு அறிவு பலம் இருந்தாலும் நன்மைகள் நடக்காது .

இங்கே ஒரு கேள்வி அவர்களுக்கு என் பெற்றோர்கள் திதி கொடுக்க வில்லை என்றால் நான் ஏன் தரித்தரம் அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வி ஒரு ஒரு நபர்களுக்கும் வரும் .

இதெற்கு நூல்கள் சொல்லும் பதில் தாத்தா/பாட்டனார் தான் சுழற்சியாக பேரனாக பிறக்கிறார் என்று சொல்லபடுகிறது ,இந்த கருத்தை வைத்து 

தாத்தா சொத்து பேரனுக்கு என்று சொல்ல படுகிறது .(இதை பற்றி நாம் கருட புராணத்தில் அறியாலாம் ).

இவ்வாறாக வேதனை அனுபவிக்கும் நபர்கள் 

ஆன்மாக்கள் சாந்திக்காக பல உயிர்கள் வழிபாடு செய்த சிவபெருமான் 

கோவில்களை வழிபட்டு வர ஆண்மக்கள் சாந்தி பெற்று ஆசிகளை தருவார்கள் .

முதல் படியாக

1.ராமேஸ்வரம் –வருடம் 3 முறை (தை ,புரட்டாசி ,ஆடி )

2.திருகனாப்போர் (காளையார் கோவில்) –அமாவசை.

3.திருபஞ்சலி –அமாவசை 

4.திருபுரதுருத்தி -அமாவசை (திருவையார் )

5.சதுரகிரி -அமாவசை …

இங்கே சொல்லப்பட்டது அனைத்தும் ஆன்ம சாந்தி கோவில்கள் ,

முடிந்தவரை இங்கே ஒரு முறையாவது சென்று வழிபட்டு வந்தால் அமாவசை பிறப்புகள் மேன்மை தரும் .

இவர்களை போல கிரகணத்தில் பிறந்தவர்களுக்கும் மேன்மை தரும் கோவில்கள் உண்டு ,அதை தெரிந்து கொள்ளும் முன் சில விவரம்கள் ..

சோதிட நூல்களில் பல ரகசியம்கள் நம் படிக்கும் பொழுது தெரியும் ஆனால் 

சில மறைக்க பட்ட விவரம்கள் குருவின் ஆசியால் மட்டுமே நமக்கு புலப்படும் ,

ஒரு சில விவரம் எல்லோருக்கும் புரியாது என்றோ அன்ற சித்தர்கள் மறைத்து வைத்து உள்ளார்கள் என்று அவர்கள் உணர்த்தும் பொழுது 

எனக்கு புரிந்தது .

நான் ஒரு ஒரு பௌர்ணமி தினமும் சிவ பெருமான் கோவிலுக்கு போவது உண்டு இப்படி நான் ஒரு முறை திருவெண்காடு 

கோவிலின் சிறப்பை படித்து அறிந்து சென்று வழிபட்டு வந்த பொழுது ,

அன்று விடியலில் கனவில் நான் கண்ட காட்சி எனக்கு வியப்பை கொடுத்தது .

அம்பாளின் கருவறையின் அருகே நானும் என்னுடன் பல பக்தர்களும் நின்று இருந்தோம் அர்ச்சகர் எங்களிடம் வந்து கிரகணத்தில் பிறந்தவர்கள் ஒரு பக்கமாக நில்லுங்கள் என்று சொன்னவுடன் ,என் அருகில் நின்ற பலர்

ஒரே வரிசையாக தனியாக நின்றார்கள் ,நான் மாறவில்லை அங்கே நின்றேன் ,

அர்ச்சகர் அவர்களிடம் குவளையில் உள்ள நிறை அவர்கள் தலையில் தெளித்து ஒரு வளையும் போல் ஒன்றை தலையில் வைத்து(சடாரி போல )அமுத்தி எடுத்து விட்டு விபூதி தந்தார் ,

அவர்களை கவனித்து விட்டு என்னை பார்த்து உன்னுடைய கிரகணம் 

இன்னும் விலகவில்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் ,

உடனே நான் அவரிடம் அமபாளின் நாமத்தை கேட்டேன் அவர் ” பிரம்ம வித்யாம்பிகை” என்றார் (அந்த அம்பாள் பெயர் பிரம்ம வித்யா நாயகி )

கண் விழித்து கொண்டேன் ,ஏன் நமக்கு மட்டும் அவர் தரவில்லை என்று புரியவில்லை ,

அமாவசையன்று சூரிய கிரகணத்தில் பிறந்தவன் எனக்கு எப்பொழுது விடிவு என்று குழம்பி இருந்தேன் .

சூரியனுடன் சேர்ந்த ராகு/கேது சூரிய கிரகணம் 

சந்திரனுடன் சேர்ந்த ராகு/ கேது சந்திர கிரகணம்

சிலர் பௌர்ணமியில் கிரகணத்தில் 

சிலர் அமாவசை கிரகணத்தில் பிறப்பார்கள்

120 சோதிட நூல்கள் எழுத பட்டு உள்ளது எந்த நூலிலும் இவர்களுக்கு பரிகாரம் சொல்ல படவில்லை ,

சித்தர்கள் மட்டும் தான் இவைகளுக்கு பலனும் பரிகாரமும் 

நமக்கு சொல்லி உள்ளார்கள்.

இதன் படி குறுமுனி எனக்கு தெரியபடுக்திய கோவில்கள் …

1.மேலபெரும்பள்ளம் –பௌர்ணமி .–பும்புஹார் 

2.கருப்பறியலூர் (தலை ஞாயறு)–பௌர்ணமி–மாயவரம் 

3.பருதிநியமனம் (பருதியப்பர் கோவில் ) -பௌர்ணமி–தஞ்சை 

4. நெடுங் குளம் –பௌர்ணமி–திருச்சி

இந்த கோவில்கள் வழிபாடு செய்து நான் திருபடுவூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய சென்ற பொழுது அங்கே பிரம்ம வித்யாம்பிகை அமபாளை கண்டேன் ….

அன்பர்கள் அனைவருக்கும் இந்த தகவல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ….

Advertisements

One thought on “பரிகார ஸ்தலங்கள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s