மங்கலம் தரும் குங்குமம்


ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்
திலர்த வர்மம் என்பதே சுடரொளிக்காலம்
பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர் பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல எதிர்கால சந்ததிகளையே கேள்விக் குறியாக்கியுள்ள அவலம் பற்றிய ஒரு கட்டுரையே இது.
இதில் பல அதீத விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நடு நெற்றியில் உள்ள லலாட மத்தியை (புருவமத்தி என்றும் அழைக்கப்படும்) நெற்றிக்கண் என்றும் அழைக்கப்படும். இதன் மூலம் திபேத்திய லாமாக்கள் மற்றவர்களின் ஆரா என்ற ஒளியுடலை காண உபயோகிக்கிறார்கள். எனவேதான் சிவனுக்கு இந்தக் கண்ணை வெளிப்படையாக தெரியும் வண்ணம் படங்களாக வைத்துள்ளார்கள்.
பழங்காலத்திலும் இக்காலத்திலும் மந்திரவாதிகள், ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்ஞா சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும் சக்தியை செலுத்துவார்கள். மேலும் அந்த பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு புள்ளியாக அக்குபங்சரில் (EXTRA-1 IN DU-MERIDIAN) பயன்படுத்தப்படுகிறது.
மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள் திலர்த வர்மம் என வர்மப்பிரிவில் குறிப்பிடுகின்றனர். யோக சாதன முறைகளில் இதை ருத்ர க்ரந்தி என அழைக்கப்படுகிற்து. ஆக்ஞா சக்கரம் என்றால் கட்டளையிடும் சக்கரம் என்று பொருள். இந்த ஆக்ஞா சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம், மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்? செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம் (PSHYCHIC ATTACKS & EVIL SPIRITS ATTACHMENTS) போன்றவற்றையும் செயல்படுத்த முடியும்.
மேலும் clairvoyance என்ற தொலைவில் உணர்தல் போன்றவற்றிற்கும், அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நோய்களைக் களையவும், வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் இந்த ஆக்ஞா சக்கரம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.
ஆக்ஞா சக்கரம் யோக சாதன முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து. தியான முறைகளின் மூலமாக முக்தியை அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பெண்களை இது போன்ற தொல்லைகளிலிருந்து காப்பாற்ற

ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம் பொருந்திய குங்குமம். நல்ல மஞ்சளையும் வெண்காரத்தையும் (சிலர் நன்றாக ஒட்டுவதற்காக நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்) சேர்த்தரைத்து மங்கல மந்திரங்களை ஓதி செய்யப்படும் குங்குமம், பெண்களைப் பல விதஙகளிலும் காக்கிறது. 
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை, இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது.
மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும். இப்படிப்பட்ட சுரப்பிகளின் தலைவனை கட்டுப்படுத்தும் கட்டளைச் சக்கரத்தை குளுமையாக வைத்திருக்கவே குளுமையை கொடுக்கும் மஞ்சளை வெண்காரத்துடன் சேர்த்து சிவப்பாக மாற்றி உபயோகிக்க சித்தர்கள் கொடுத்துள்ளார்கள். 
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID STIMULATING HARMON) தைராய்டு சுரப்பியை செயல்படுத்த வைக்கும். தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் இரண்டும் (T3,T4) பெண்களின் மாதாந்தர விலக்கை (MONTHLY PERIODS) நிர்ணயம் செய்கிறது. இதே சுரப்பு நீர்கள்தான் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன் (ESTROGEN)சுரப்பையும் நிர்ணயம் செய்யும்.
ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் தனது முதல் ருதுவான மாதாந்தர விலக்கை (MONTHLY PERIOD) அடைகிறாளோ அதே நட்சத்திரத்தில் மீண்டும் மீண்டும் 27 நாட்களுக்கு ஒரு முறை மாதாந்தர விலக்கானால் மட்டுமே அவர்களது ருது ஜாதகமே வேலை செய்யும். ருது ஜாதகமே பொய்யாகப் போகும் நிலைமையை இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் உருவாக்கியுள்ளன.
தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எஸ்ட்ரோஜன் (ESTROGEN) சுரப்பு குறைவதாலும் உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக் குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம் அதிகமாக வளர்ந்து பெண்கள், ஆண் தன்மை கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக நேரிடுகிறது. இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே கேள்விக்குறியாகி உள்ளது. அவையெல்லாம் சித்தர்கள் அருளால் தீரவே இந்தக் கட்டுரை.
எனவே ஸ்டிக்கர் பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம் காப்பதுடன் நம் நலமும் காப்போம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s