கருணை தெய்வம்

image

பெரியவா      சரணம்

ஒரு முறை ஒரு வீட்டு வாசலிலேயே    பெரியவா  அனுஷ்டானம் செய்ய உட்கார்ந்து விட்டார். அவர் முன்னால் ஒரு கடத்தில் தீர்த்தம் இருந்தது. பக்கத்தில் ஒருவருமில்லை.

எங்கிருந்தோ ஒரு நாய் வந்து அனுஷ்டானத் தண்ணீரில் வாய் வைத்துக் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கைங்கைர்யம் செய்பவர் அதைப் பார்த்து நாய் மேல் உள்ள கோபத்தில் ஒரு கல்லால் அதை அடித்தார். அடி கொஞ்சம் பலமாகப் பட்டு விட்டது. நடக்க முடியாமல் பரிதாபமாகக் கத்தியது.

பெரியவா கண்ணைத் திறந்து நடந்ததை அறிந்தார். “ நாய் வெச்சுடுத்துன்னு அடிச்சியா? அது யாருடைய தப்பு? பாவம்! வாயில்லா ஜீவன். தாகம் எடுத்தால் என்ன செய்யும்? தண்ணீரைக் கண்டதும் வாய் வெச்சிருக்கு. இது சங்கராசார்யருடையது தொடக் கூடாதுன்னு அதுக்குகுத் தெரியுமா? நீ அதை அடிச்சது மகா பாவம்!” என்று வருத்தப்பட்டார்.

பிறகு, “சரி, நீ போய் இந்தத் தெருவில் எல்லாரிடமிருந்தும் சாப்பிட என்னென்ன கிடைக்கிறதோ எல்லாத்தையும் வாங்கிண்டு வா! என்று அனுப்பினார்.

வந்த ஆகாரத்தை அந்த நாய்க்கு மட்டுமில்லாமல் இன்னம் இருந்த தெரு நாய்களுக்கெல்லாம் விருந்து படைத்தார். மறக்காமல் தண்ணீரும் தரச் செய்தார். கல்லால் அடித்த சிப்பந்தியும் கலங்கிய கண்களுடன் அந்தக் காட்சியைப் பார்த்துப் பரவசமடைந்தார்.

கருணை தெய்வம்! காருண்ய மூர்த்தி ! நம் பெரியவா

One thought on “கருணை தெய்வம்

Leave a comment