குரு வாக்கு

image

என்ன? வீடு கட்டி முடிச்சுட்டியா?

பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் கந்தஸாமி. ஆனால் அதிக வஸதி கிடையாது. கடனோ உடனோ வாங்கி சின்னதாக தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டினார். இந்தக் கடனை அடைக்கவே எத்தனை காலம் ஆகுமோ தெரியாது! இப்போது அதற்கு க்ருஹப்ரவேஸம் பண்ணியாகணுமே? அதற்கு ஆகும் செலவுக்கு எங்கே போவார்! இனிமேல் கடன் குடுப்பார் யாருமில்லை!

பகவானைத் தவிர ஏழைப் பங்காளன் யார்? கண்கண்ட தெய்வமான பெரியவாளிடம் ஓடினார் கந்தஸாமி. விடியற்காலையே மடத்துக்கு வந்துவிட்டார். பெரியவாளும் அப்போதுதான் எழுந்து வெளியே வந்தார்.

“என்ன? வீடு கட்டி முடிச்சுட்டியா?…”

“பெரியவங்க தயவுல ஆச்சுங்க ஸாமீ ! ஆனா…. இந்த பூசையெல்லாம் செய்ய தோதுப் படலே ! பெரியவங்கதான் நல்ல நாள் பாத்துக் குடுக்கணும்”…

கந்தஸாமியின் கஷ்டம் பெரியவாளுக்கு தெரியாதா என்ன? அதனால்தானே இத்தனை அதிகாலை வரவழைத்தருக்கிறார்!

கிழக்கு திசையைப் பார்த்தார். கந்தசாமியின் பக்கம் திரும்பி,

“இதோ பாரு! இன்னும் போது விடியல… இது ப்ரஹ்ம முஹூர்த்தம்! ஒடன்…ன்னே போயி பஶு மாடு, கன்னை வீட்டுக்குள்ள ஒட்டு! பாலைக் காய்ச்சி ஸாப்டு! பிள்ளையார் படத்துக்கு ஒரு மொழம் கதம்பம் ஸாத்து!…க்ஷேமமா இருங்கோ!”

கந்தஸாமி மஹா பாக்யவான்! அதிகாலை ப்ரத்யேகமாக பெரியவாளே அனுக்ரஹம் செய்த விஶ்வரூப தர்ஶனம்! பெரியவாளே க்ருஹப்ரவேஸம் பண்ணுவதற்கு சொன்ன வழி..!

எவ்வளவு ஸிம்பிளா பத்து ரூபாயில் க்ருஹப்ரவேஸம்!

எல்லாவற்றையும் த்ருப்தியாக பண்ணிவிட்டு, ஏழு மணிக்கு திரும்பி வந்தார், மனைவியுடன்.

“பெரியவங்க சொன்னபடியே, சொன்ன முஹூர்த்தத்துலேயே புது வீட்டுக்குள்ள பஶு,கன்னு அழைச்சுட்டு வந்து, பாலைக் காய்ச்சி, ஸாமி கும்புட்டோம்… எல்லாம் நல்லபடி ஆயிடுச்சு ஸாமீ ”

தம்பதியாக நமஸ்காரம் பண்ணினார்கள்.

திருக்கரங்களைத் தூக்கி ஆஸீர்வாதம் பண்ணினார்.

பெரியவா எத்தனையோ விஷயங்களில் எளிமையாக இருக்கச் சொன்ன பிறகும், “அடுத்தவா என்ன நினைப்பா? ஒரே பொண்ணு, அல்லது ஒரே பிள்ளை, Life-ல ஒரு தடவைதானே கல்யாணம், க்ருஹப்ரவேஸம் எல்லாம் பண்றோம்! கொஞ்சமாவது டீஸன்டா பண்ண வேண்டாமா?”….

இதெல்லாம் நம் எல்லாருக்கும் தோன்றும்.

பெரியவாளோ அல்லது அவரவர்க்கான குருநாதர்களோ, தங்களுடைய அவ்யாஜகாருண்யம் ஒன்றினால் மட்டுமே, நம்முடைய வாழ்வில், தங்களைத் தாங்களே பிணைத்துக் கொள்கிறார்கள். அந்த ஒரு கருணைக்கே நாம் எதாலும் ஈடு செய்ய முடியாது. அப்படியிருக்க, அப்பேர்ப்பட்ட குருநாதன் சொல்லும் உபதேஸங்கள், நிஸ்சயமாக நம்முடைய “சமத்து” தெரிந்து, அதற்கேற்றபடிதான் இருக்கும். இந்த மனுஷ்ய ஜன்மாவே எப்பவோ ஒரு தடவைதானே வருது? அந்த ஜன்மாக்குள்ள, பகவானை அடைஞ்சுடவோ, at least அடைய ப்ரயத்னமோ பண்ணவேண்டாமா?

மேலே உள்ள ஸம்பவத்தில், கந்தஸாமி, அரைமணி நேரத்தில் க்ருஹப்ரவேஸத்தை பத்து ரூபாய் செலவில் முடித்துவிட்டார். பெரியவா ‘ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் பண்ணு’ என்று சொன்னது மட்டுந்தான் அவருடைய சிந்தையில் இருந்தது.

“அதெப்படி ஸாத்யம்? நாலு பேரை கூப்பிட்டு ஸாப்பாடு போட வேணாமா? மாமன், மச்சான் ஸொந்தபந்தங்கள் என்ன நினைப்பார்கள் ?”

என்றெல்லாம் அவர் துளியும் யோஸிக்கவில்லையே!

இந்த க்ஷணம் கூட, பெரியவா நம்முடன்தான் இருக்கார்….என்ற ஸத்யத்தை உணர்ந்தாலே, அப்பப்போ ஞாபகப்படுத்திக் கொண்டாலே, அவர் சொல்வது அத்தனையுமே நம்மால் follow பண்ண முடியும் என்பதை நிதர்ஶனமாக அனுபவிக்கலாம்.

எப்படி தனக்கெட்டாத பொம்மையை, குழந்தை தாவித்தாவி எடுக்க முயற்சிப்பதை பார்த்ததும், அம்மாக்காரி ஓடிவந்து, அதை எடுத்து குழந்தையிடம் குடுப்பாளோ, அப்படி, நாம் பெரியவா சொன்னதை வாழ்வில் கடைப்பிடிக்கும், நம்முடைய ப்ரயத்தனத்தை பண்ணினால் போறும். பெரியவா அதை ஸாத்யமாக்கி விடுவார்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s