நவபாஷாணம்

இந்த உலகத்தில் உள்ள அணைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி இருக்கும்? இதை கேள்வியை உலகில் உள்ள நவீன விஞ்சானிகளிடமோ அல்லது மருத்துவரிடமோ கேட்டால் இது முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம் இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18 சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர் போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த மருந்துதான் நவபாஷாணம். இதற்காக அவர் மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார் கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து எடுத்தார் அவை (கௌரிபாஷானம் ,கெந்தகபாஷானம்,சீலைபாஷானம், வீரப்பாஷானம்,கச்சாலபாஷானம், வெள்ளை பாஷானம் தொட்டிபாஷானம்,ச ூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9 பாஷானங்களை 9 விதமான எரிபொருளை கொண்டு சூடு பண்ணி பூமியில் குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து மருந்தாக மக்களுக்கு கொடுத்தார். இந்த நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில் இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக வடித்தார் மருந்தாகவே மக்களுக்கு கொடுத்திருக்கலாமே என்று. இதைபற்றி இன்னொரு தகவல் என்னவேன்றால் நவபாஷானத்தை போகர் கண்டுபிடித்தது மனிதனின் நோயை போக்குவதற்கு இல்லை மனிதனை இறப்பே இல்லாமல் செய்வதற்குதான் கண்டுபிடித்தார் என்று சில சித்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் கண்டுபிடித்த நவபாஷாணத்தை பற்றி கேள்விபட்ட மற்ற சித்தர்கள் போகரை நீ இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய் இந்த நவபாஷானத்தை உடனே அழித்து விடு என்று அறிவுரை கூறினார்கள்.உடனே தன் தவறை உணர்ந்த போகர் அந்த பாஷாணங்களை அழிக்க மணமில்லாமல் அதை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தமுடியாது படி முருகன் சிலையாக செய்து பழனியில் வைத்து விட்டார். இந்த கதையை கேட்டவுடன் சில பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும் என்று இதை உங்களுக்கு அறிவியல் பூர்வமாகவே விளக்குகிறேன் அதாவது இப்போம் உள்ள dna(மரபனு) ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு மனிதனின் மரபனுவை சுத்திகரிப்பதன்மூலம் இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம் என்று கூறுகின்றனர் . அதை போல் இந்த நவபாஷாணம் ஏன் நமது மரபனுவை சுத்திகரித்து இறப்பை தடுக்ககூடாது. ஏது எப்படியோ இந்த நவபாஷானத்தை நமது அரசாங்கம்தான் ஆய்வுக்கு உட்படுத்தி அதோடு உண்மை தன்மையை உலகுக்கு தெரியபடுத்த வேண்டும மக்கள் அனைவரும் சித்தர்களின் இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நோக்கம். கிருஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார் இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரைபற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலை படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன் . இப்பேர்பட்ட தமிழனை உலகம்முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறார் இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்துவிட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது. தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்ஞானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே.இப்படி தமிழனின் புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது .

Advertisements

One thought on “நவபாஷாணம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s