தானம்

image

ஒரு உயிருக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் என நான்கு துணை உண்டு. கர்ணனுக்கு தாய் துணை இல்லை; தந்தை யார் என்று தெரியாது. தேரோட்டி மகனாக வளர்கிறான். வில் வித்தை போட்டியில் விளையாட, அரச குலத்தினர் மறுப்பு தெரிவித்தபோது, துரியோதனன் ஆதரவு கொடுக்கிறான். பரசுராமன், கர்ணன் ஒரு அந்தணர் இல்லை; சத்ரியன் என்று தெரிந்ததும், “நீ கற்றது அனைத்தும் உரிய நேரத்தில் மறந்து போவாய்’ என சாபமிடுகிறார். இதன் மூலம் கர்ணனுக்கு “குரு’ பாதுகாப்பும் இல்லாமல் போய்விடுகிறது.
பாரத போர் நடக்கிறது. காயம்பட்டு கர்ணன், கீழே கிடக்கிறான். அந்தணர் வேடத்தில் வந்து தானம் கேட்கிறார், கிருஷ்ணர். என்னிடம் இருப்பதை கேள் தருகிறேன் என
கர்ணன் கூறுகிறான். இறைவனே கையேந்திய வரலாறு கர்ணனின் வரலாற்றில் வருகிறது. புண்ணியத்தை தானமாக கேட்கிறார், அந்தணர். அனைத்தையும் கொடுக்கிறான் கர்ணன்.
தானம் கேட்டு வந்த கிருஷ்ணன் கையில் கர்ணனின் ரத்தம் பட்டதும், கிருஷ்ணனுக்கு தானம் கொடுக்கும் குணம் வந்து விடுகிறது. “உனக்கு என்ன வேண்டும் கேள்,’ என, கிருஷ்ணன் கேட்கிறார். “தானம் கேட்டு வருபவர்களுக்கு தானம் கொடுக்கும் இதயத்தை கொடு,’ என்கிறான் கர்ணன்.
தன்னம்பிக்கை இல்லாதவனால் சம்பாதிக்க முடியாது. கடவுளை நம்பாதவன் நாத்திகன் அல்ல; எவன் தன்னை நம்பவில்லையோ, அவன்தான் நாத்திகன். கர்ணன் தன்னை முற்றிலும் நம்புகிறான். கிருஷ்ணர் கர்ணனிடம் இதயத்தை தருகிறேன்; முக்தியும் பெறுவாய், என்றார்.
மரணத்தை கண்டு அஞ்சக்கூடாது. நான் செய்த காரியங்களை தெரிந்து கொண்டு நான் எங்கே போகிறேன். என தெரிந்தவன் கர்ணன். தாழ்ந்தவன், ஜாதி, மதத்தை கூறி இழிவு செய்யப்பட்டதால், அவன் தீயவனிடம் சென்று சேர்கிறான். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கு பேர் ஆதரவு இல்லை என்றாலும், கொடை, தானத்தால் வென்று நின்றவன் கர்ணன்.
-Sriram

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s