ரசம்

image

அனுதினம் ரசம் ஆரோக்யம் வசம்                 ரசம் என்னும் சூப்பர் திரவம் பற்றி ஒரு அலசல்.

> >
> >
> > ரசம் என்னும்
> > சூப்பர் திரவம் பற்றி
> > ஒரு அலசல் { சமையலறை
> > }
> >
> > சித்த
> > வைத்திய
> > முறைப்படி நம் உணவில்
> > தினசரி துணை உணவுப்
> > பொருட்களாக வெள்ளைப்
> > பூண்டு, பெருங்காயம்,
> > மிளகு, சீரகம்,
> > புதினாக்கீரை, கறி
> > வேப்பிலை,
> > கொத்துமல்லிக் கீரை,
> > கடுகு, இஞ்சி முதலியன
> > சேர வேண்டும்.
> >
> >
> > இந்த
> > ஒன்பது
> > பொருட்களும்
> > ஆங்காங்கே நம் உணவில்
> > சேருகிறது என்றாலும்,
> > ஒட்டு மொத்தமாகச்
> > சேர்வது
> > ரசத்தில்தான்.
> >
> > புளிரசம்,
> > எலுமிச்சை
> > ரசம், மிளகு ரசம்,
> > அன்னாசிப் பழரசம்,
> > கொத்துமல்லி ரசம்
> > என்று பலவிதமான
> > சுவைகளின் ரசத்தைத்
> > தயாரித்தாலும் இந்தப்
> > பொருட்கள்
> > பெரும்பாலும் தவறாமல்
> > இடம்
> > பெற்றுவிடும்.
> >
> > பல நோய்களைக்
> > குணமாக்கும் மாற்று
> > மருந்து (Antidote) தான் இந்த
> > ரசம்.
> >
> > வைட்டமின்
> > குறைபாடுகளையும்
> > தாது உப்புக்
> > குறைபாடுகளையும் இது
> > போக்கிவிடுகிறது.
> >
> > அயல்
> > நாட்டினர்
> > உணவு முறையில்
> > சூப்புக்கு முதலிடம்
> > கொடுத்துள்ளனர்.
> >
> > இது,
> > ரசத்தின்
> > மறுவடிவமே.
> >
> > ரசமோ,
> > சூப்போ
> > எது சாப்பிட்டாலும்
> > பசியின்மை, செரியாமை,
> > வயிற்று உப்புசம்,
> > சோர்வு, வாய்வு,
> > ருசியின்மை,
> > பித்தம் முதலியன உடனே
> > பறந்து
> > போய்விடும்.
> >
> > சித்த
> > வைத்தியப்படி
> > உணவே மருந்தாகவும்,
> > மருந்தே உணவாகவும்
> > இந்தியர்கள்
> > பின்பற்றுவது
> > ரசத்தைப் பொறுத்தவரை
> > 100 சதவிகிதம்
> > பொருந்தும்.
> >
> > ரசத்தில்
> > போடப்படும்
> > சீரகம், வயிற்று
> > உப்புசம், தொண்டைக்
> > குழாயில் உள்ள சளி,
> > கண்களில் ஏற்படும்
> > காட்ராக்ட்
> > கோளாறு, ஆஸ்துமா
> > முதலியவற்றைக்
> > குணப்படுத்துகிறது.
> >
> > ரசத்தில்
> > சேரும்
> > பெருங்காயம் வயிறு
> > சம்பந்தமான கோளாறுகள்
> > அனைத்தையும்
> > குணப்படுத்துகிறது.
> >
> > வலிப்பு
> > நோய்
> > வராமல்
> > தடுக்கிறது.
> >
> > மூளைக்கும்
> > உடலுக்கும் அமைதியைக்
> > கொடுக்கிறது.
> >
> > நரம்புகள்
> > சாந்தடைவதால்
> > நோய்கள்
> > குணமாகின்றன.
> >
> > அபார்ஷன்
> > ஆகாமல்
> > தவிர்த்துவிடுகிறது.
> >
> >
> > புரதமும்
> > மாவுச்சத்தும்
> > பெருங்காயத்தில் தக்க
> > அளவில் உள்ளது.
> >
> > கொத்துமல்லிக்கீரை
> > ரசத்தில் சேர்வதால்,
> > காய்ச்சல் தணிந்து
> > சிறுநீர் நன்கு
> > வெளியேறுகிறது.
> >
> > உடல்
> > சூடு,
> > நாக்கு வறட்சி முதலியன
> > அகலுகின்றன.
> >
> > கண்களின்
> > பார்வைத்
> > திறன்
> > அதிகரிக்கிறது.
> >
> > மாதவிலக்கு
> > சம்பந்தமான கோளாறுகள்
> > வராமல் தடுக்கிறது.
> >
> >
> > வயிற்றிற்கு
> > உறுதி தருவதுடன் குடல்
> > உறுப்புகள்
> > சிறப்பாகச்
> > செயல்படவும்,
> > செரிமானக்
> > கோளாறுகளைத்
> > தடுக்கவும்,
> > நீரிழிவு, சிறுநீரக்
> > கோளாறு முதலியவை
> > இருந்தால் அவற்றைக்
> > குணப்படுத்தவும்,
> > ரசத்தில்
> > சேரும் கறிவேப்பிலை
> > உதவுகிறது.
> >
> > கறிவேப்பிலையை
> > ஒதுக்காமல் மென்று
> > தின்பது நல்லது.
> >
> > கறி
> > வேப்பிலையால்
> > ரசம் மூலிகை டானிக்காக
> > உயர்ந்து
> > நிற்கிறது.
> >
> > ரசத்தில்
> > சேரும்
> > வெள்ளைப்பூண்டு,
> > ஆஸ்துமா, இதயக் கோளாறு,
> > குடல் பூச்சிகள்,
> > சிறுநீரகத்தில் உள்ள
> > கற்கள்,
> > கல்லீரல் கோளாறுகள்
> > முதலியவற்றைக்
> > கட்டுப்
> > படுத்துகிறது.
> >
> > இதயத்திற்கு
> > இரத்தத்தைக் கொண்டு
> > செல்லும் குழாய்கள்
> > தடித்துப் போகாமல்
> > பார்த்துக்
> > கொள்கிறது.
> >
> > தக்க
> > அளவில்
> > புரதமும் நோய்களைக்
> > குணமாக்கும் ‘பி’
> > வைட்டமின்களும், ‘சி’
> > வைட்டமின் களும்
> > பூண்டில்
> > இருப்பதால் நுரையீரல்
> > கோளாறு, காய்ச்சல்
> > போன்றவையும் எட்டிப்
> > பார்க்காது.
> >
> > தலைவலி,
> > தொடர்ந்து
> > இருமல், மூக்கு
> > ஒழுகுதல் போன்றவை
> > ரசத்தில் சேரும்
> > இஞ்சியால் எளிதில்
> > குணம் பெறுகின்றன.
> >
> > மூச்சுக்குழல்,
> > ஆஸ்துமா, வறட்டு
> > இருமல், நுரையீரலில்
> > காசம்
> > முதலியவற்றையும்
> > குணமாக்கி,
> > குளிர்காய்ச்சலையும்
> > தடுக்கிறது இஞ்சி.
> >
> >
> > ஜலதோஷம்,
> > காய்ச்சல்,
> > நரம்புத் தளர்ச்சி,
> > மலட்டுத்தன்மை
> > முதலியவற்றை ரசத்தில்
> > சேரும் மிளகு, சக்தி
> > வாய்ந்த
> > உணவு மருந்தாக இருந்து
> > குணப்படுத்துகிறது.
> >
> > தசைவலியும்,
> > மூட்டுவலியும்
> > குணமாகின்றன. வாதம்,
> > பித்தம், கபம் வராமல்
> > தடுக்கிறது.
> >
> > ரசத்தில்
> > சேரும்
> > கடுகு உடம்பில்
> > குடைச்சல், தலை சுற்றல்
> > முதலியவற்றைத்
> > தடுக்கிறது.
> >
> > வயிறு
> > சம்பந்தமான
> > கோளாறுகளை நீக்கி
> > வயிற்றைச் சுத்தமாக
> > வைத்திருக்க
> > உதவுகிறது.
> >
> > ரசத்தில்
> > புளியின்
> > அளவை மட்டும் மிகக்
> > குறைவாகச்
> > சேருங்கள்.
> >
> > மழைக்காலத்தில்
> > உடல் நலத்தைக் காத்து
> > முன்கூட்டியே
> > நோய்களைத்
> > தடுத்துவிடுவதால்,
> > ரசத்தின் உதவியால்
> > ஜலதோஷம், ப்ளூ
> > காய்ச்சல் இன்றி
> > வாழலாம்.
> >
> > வெயில்
> > காலத்தில்
> > நாக்கு வறட்சி, அதிகக்
> > காப்பி, டீ
> > முதலியவற்றால் வரும்
> > பித்தம் முதலிய
> > வற்றையும், தினசரி
> > உணவில் சேரும் ரசம்
> > உணவு மருந்தாகக்
> > குணப்படுத்தும்.
> >
> > எனவே,
> > ரசம்
> > என்னும் சூப்பர்
> > திரவத்தைக் கூடியவரை
> >
தினமும் உணவில்
> > சேர்த்துக்
> > கொள்ளுங்கள்.

Advertisements

One thought on “ரசம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s