மூலிகை நடராஜர்

image

திருச்சுழியில்… மூலிகை நடராஜர்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது அருப்புக்கோட்டை. இந்த ஊரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சுழி. பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் அவதாரத் திருத்தலம் இது!

இந்த ஊரின் மையப் பகுதியில் அழகிய சிவாலயம் அமைந்துள்ளது. நந்தவனத்துடன் கூடிய அற்புதமான ஆலயம். இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீநடராஜரின் திருமேனி கொள்ளை அழகு. இந்த விக்கிரகமானது, பச்சிலை மூலிகைகளால் ஆனது என்பது குறிப்பிடத் தக்கது!

தாயார் சந்நிதியில்… கூடு கட்டும் தேனீக்கள்!

திருவாரூர் அருகே உள்ளது திருக்கண்ண மங்கை திருத்தலம். இங்கே உள்ள பெருமாள் கோயிலும் திருக்குளமும் பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது.
ஆலயத்தில், தாயார் சந்நிதியில் இரண்டு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலிலும் ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் காலத்தில், இடது புற ஜன்னலிலுமாகக் கூடு கட்டுகின்றன.

Advertisements

One thought on “மூலிகை நடராஜர்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s