கோவிந்த நாமம்

image

அபூர்வமான படம் :

விளக்க முற்பட்டேன் 
அதன் விளைவே கீழ்காணும் 
பதிவு !!

சஞ்சயன் பாண்டவர்களை (விராட நாட்டில் அங்ஞாத வாசம் முடிந்தபின்) திருதாஷ்ட்ரிணனின் தூதவனாக சந்தித்து துரியோதனனின் நிலைப் பாட்டை தெரிவிக்கிறான். கௌரவர்கள் போர் செய்யாமல் உனக்கு உன் ராஜ்ய பாகத்தை கொடுக்க இயலாவிடினும் கூட அந்த வ்ருஷ்ணி வம்ஸ மன்னர்களின் ராஜ்யத்தில் பிச்சையெடுத்து வாழ்வது நலம். ஆனால் யுத்தம் செய்து ராஜ்யத்தை பெறுவது நல்லதல்ல என்ற துரியோதனனின் செய்தியை கூறுகிறான். பாண்டவர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணன் சமாதனம் செய்து, சஞ்சயனை நாளை தன்னை தனது (அவருக்கு என ஒதுக்கப் பட்ட சிறந்த மாளிகை) இருப்பிடத்தில் சந்திக்குமாறு பணிக்கின்றார்.

மறுநாள் சஞ்சயன் கிருஷ்ணனை சந்திக்கிறான். அவன் கண்ட காட்சி அவனை ஆச்சிரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதை கீழே பார்ப்போம் !

தூது முடிந்து விராட நகரத்திலிருந்து ஹஸ்தினாபுரம் வந்து மன்னன் திருதிராஷ்டிறரை சந்தித்து பாண்டவர்களின் வலிமை பிரபாவம் அவர்களது ஸ்ரீ கிருஷ்ணரின் தோழமை பற்றி புகழ்ந்து கூறுகிறான். ஸ்ரீ கிருஷ்ணர் கேட்டுக் கொண்டபடி நான் மிகுந்த கவனத்துடன் அந்த அந்தப்புரத்திருக்கு சென்றேன். அங்கு அபிமன்யுவும் நகுல சகாதேவனும் கூட செல்ல முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் திவ்யமான மஞ்சத்தில் சயனித்திருப்பதை கண்டேன். அவரது திருவடிகள் இரண்டையும் அர்ஜுனன் மடி மீது வைத்திருந்தார். அர்ஜுனனின் கீழே தொங்கிய பாதங்களில் ஒன்று திரௌபதி மடி மீதும் மற்றொன்று சத்ய பாமா மடி மீதும் இருந்தது. என்னைக் கண்டதும் அர்ஜுனன் நான் உட்கார ஒரு தங்க ஆசனத்தை அளித்தான் அதை நான் தொட்டு வணங்கிவிட்டு தரையில் உட்கார்ந்தேன். நான் அவர்களின் பதிலுக்காக காத்திருந்தேன். அப்போது அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி பதில் அளிக்குமாறு வேண்டிக் கொண்டான். பிறகே அந்த ரிஷிகேசன் எழுந்து நேராக உட்கார்ந்தார். அவர் என்னிடம் ” சஞ்சயா ! நீ மகாராஜா திருதிராஷ்டிரரிடமும், பீஷ்ம பிதாமகரிடமும் துரோனாச்சரியாரிடமும் நான் கூறும் செய்தியை சொல். பெரியவர்களுக்கு எனது வணக்கத்தையும், சிறியவர்களிடம் நான் குசலம் விசாரித்ததாகவும் சொல்லு. அதன் பிறகு அவர்களிடம் கூறவேண்டிய செய்தி இது “உங்களுக்கு தலை மேல் ஆபத்து வந்துள்ளது. ஆகவே யாகம் அனுஷ்டானங்களை செய்து கொள்ளுங்கள். வேதியர்களுக்கும் நல்லவர்களுக்கு தானம் செய்யுங்கள்.

என்னை கோவிந்தா என்று கூவி அழைத்த அந்தக் கடன் எனக்கு பெருகிவிட்டது. கிருஷ்னையின் (த்ரௌபதியின்) அந்த பயந்த குரலை என்னால் ஒரு வினாடி கூட மறக்க முடியவில்லை. என்னோடு சேர்ந்துள்ள அர்ஜுனனிடம் யுத்தம் செய்து மரணத்தின் வாய்க்குக் கவளமாகாமல் தப்ப யாரால் முடியும் என்றார்.

அன்பர்களே பகவானின் திருவடிகளை பாருங்கள். திருவடியை தாங்கிய அர்ஜுனனின் பாதங்களை பாருங்கள் என்னே ஓர் அற்புத காட்சி. நாம் என்று பகவானின் திருவடிகளை காண போகிறோம்.

கோவிந்தா என்ற நாமத்தை கூறினால் அவன் கடன் பட்டதாக சொல்கிறான் என்னே ஒரு பாசம் நம் மீது. சொல்லுங்கள் அனுதினமும் கோவிந்தா என்று.

கலியுகத்திலே அவன் பாதமாகிய சடாரியை அனுதினமும் தலையில் சாதிக்கப் பெறுவோம். ஸ்ரீயபதியே நீரே எங்களை ரட்சிக்கவேண்டும்.

ஸ்ரீமன் நாராயணா சரனௌ சரணம் ப்ரபத்யே !

ஸ்ரீமதே நாராயணாய நமஹ

Advertisements

One thought on “கோவிந்த நாமம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s