ராமநாமம் ஒன்றையே சதா ஜெபிப்பவன் அனுமன். ‘ராமா’ என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம்பெற்ற ஆஞ்சநேயன். எந்த யுகத்திலும் ஜீவிக்கக்கூடிய ராமபக்தன். அவரின் ராம பக்தி அளவிட முடியாதது. இவ்வாறாக அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் பெருமை பற்றிக் கூறுகிறது சுந்தர காண்டம். அனுமனுடைய ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராம பக்தி போன்ற பல உயர்குணங்கள் எல்லாம் சுந்தர காண்டத்தில்தான் முழுமையாக வெளிப்படுகின்றன. அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்
அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!
சுந்தரகாண்டம் படித்தால் தீராத பிரச்னைகளே இல்லை. சகல காரிய சித்தி, தீர்க்க முடியாத நோய்களினின்றும் விடுதலை, சுபகாரியத் தடை நீங்குதல், தனலாபம், தரித்திரம் முடிவுக்கு வந்து அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகுதல் என சுந்தரகாண்டம் தரும் பயன்கள் எண்ணற்றவை.
ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் முதலியவற்றை தீர்க்கும் சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் தொடர்ந்து படிப்பதால் மேற்கூறிய நன்மைகள் மட்டுமல்லாது ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் போன்றவை கூட நீங்கும். சுந்தர காண்டத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், ஒவ்வொரு குறையை தீர்க்கும் சக்தி உண்டு
சுந்தரகாண்டம்
Advertisements