வாழை இலை

image

ஆயுள் வளர்க்கும் வாழை இலை!

வாழையிலையில் உணவைச் சாப்பிடுவது நமது பாரதக் கலாச்சாரம். தவிர, ஆரோக்கியமானது, ருசியானது, ஆயுளை வளர்க்கும் நல்ல பழக்கமும்கூட, தோலுக்குப் பள்பளப்பும் உண்டாகும். செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாட்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

சாப்பிடு முன் தரையில் லேசாக நீர் தெளித்து, இலையின் மேல் நுனி உண்பவரின் இடப்பக்கமும், அடி வலப்பக்கமும் இருக்குமாறு விரிக்க வேண்டும். பின்பு இலையில் சிறிது நீர் தெளித்து கையால் துடைத்து, ஒரு சொட்டு நெய் இலையில் தடவி அதன்மேல் உணவு பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும். இலை நுனியில் உப்பு, ஊறுகாய், பச்சடி, பொரியல், கூட்டு, வடகம், வடை, சித்ரான்னம், அப்பளம், சுத்த அன்னம், பருப்பு அதன்மேல் நெய் விட்டு மூன்று தொன்னைகளில் தனித்தனியே குழம்பு, ரசம், பாயசம், மோர் வைக்க வேண்டும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

உறவினர்களை மேற்கு நோக்கி அமர்த்தியும், சாதுக்கள், ஞானிகளை வடக்கு நோக்கி அமர்த்தியும் உணவு பரிமாற வேண்டும். கெட்டுப் போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழையிலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் ஒரு புதிய நிற நீர் உற்பத்தியாகி இலையில் ஒட்டாமல் வடிந்துவிடும். இதனை வைத்து உணவின் விஷத்தன்மையை அறியலாம். ஆகையால்தான், எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலைவாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அல்சர் நோயினால் பாதிப்படைந்தவர்கள் தொடர்ந்து வாழையிலையில் சாப்பிட்டால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்களைக் கரைத்து புதிய செல்களைத் தோற்றுவிக்கும் தன்மை வாழை இலைக்கு உண்டு. ஆகையால்தான் தீக்காயம் ஏற்பட்டால் வாழையிலையால் சுற்றுவது வழக்கம். உணவு சாப்பிட்ட பின் இலையை நம்மை நோக்கி மடிக்க வேண்டும். இதற்கு உணவு நன்றாக இருந்தது. நம் உறவு நீடிக்க வேண்டும் என்று அர்த்தம். சாப்பாடு நன்றாக இல்லை என்றால் முன்பக்கமாக மடிக்க வேண்டும்.

அறிவியல் விளக்கம்: நாம் சாப்பிடப் பயன்படுத்தும் வாழையிலையில் உடல் எடை கூடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செம்புத் சத்துகள், கண்களைப் பாதுகாத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் குடற்புண்களை ஆற்றும் பீனால், ரத்தம் உறைவதை ஊக்குவிக்கும் வைட்டமின் கே, புற்றுநோய் காரணிகளை அழிக்கும் சாலிசிலிக் அமிலம் ஆகியவை உள்ளன. வாழை இலையில், நீர் தெளித்து, அதன்மேல் நெய் தடவி, சூடான உணவுகளை வைக்கும்போது மேற்கண்ட சத்துகளெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து வருவதால் தொண்டையில் தோன்றும் அலர்ஜியைத் தடுத்து நம் ஆயுளைக் கூட்டுகிறது.

Advertisements

One thought on “வாழை இலை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s