அனந்தாழ்வாரும் வேங்கடேசப் பெருமாளும்

image

image

அனந்தாழ்வான் தன்னுடைய குரு ஸ்ரீ ராமானுஜரின் கட்டளைப் படி திருவேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் செய்ய திருமலைக்கு வந்தார். திருவேங்கடவனுக்கு புஷ்பக் கைங்கர்யம் சமர்ப்பிக்க ஒரு புஷ்கரினியை தோண்டலானார். கர்ப்பிணியான தன் மனைவியிடம் இந்த கைங்கர்யத்தில் வேறு யாரையும் ஈடுபடுத்தாமல் தாங்கள் இருவர் மட்டுமே செய்யவேண்டும் என்று பணித்தார். அனந்தாழ்வார் மண்ணைத் தோண்டி கொடுக்க, அவர் மனைவி அதை சென்று தூரத்தில் கொட்டி வந்தார். அப்போது சிறுவன் ஒருவன் அவரின் மனைவியிடம் தான் அந்த மண்ணை கொட்டிவருவதாக வற்புறுத்தி, செய்யலானான். மனைவி மண்ணை சீக்கிரமாக கொட்டி வருவதையடுத்து, அனந்தாழ்வான் என்ன நடக்கிறது என்று பார்த்தார். சிறுவனின் செயலைப் பார்த்து கோப பட்ட அனந்தாழ்வான், மனைவியை கோபித்துக் கொண்டார். சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட, மேலும் கோபமுற்ற அனந்தாழ்வான், கையில் இருந்த கடப்பாறையை சிறுவனின் மேல் வீசினார். அது சிறுவனின் தாடையில் பட்டு இரத்தம் கசிந்தது! இதைக் கண்ட அனந்தாழ்வான், தவறை உணர்ந்து சிறுவனின் அருகே செல்ல முயன்றார். சிறுவன் ஓட, அனந்தாழ்வானும் பின் பற்றினார். திருவேங்கடமுடையான் கோவிலுக்குள் சென்ற சிறுவனைக் காணவில்லை. ஆனால், திருவேங்கடமுடையானின் திருமுகத்தில் சிறுவனுக்கு அடிபட்ட அதே இடத்தில் இரத்தக் கசிவு இருப்பதை கண்டார். வந்தது  திருவேங்கடவன்தான் என்று உணர்ந்தார். திருவேங்கடவனை தாக்கி விட்டோமே என்று பாதம் பணிந்தார். பச்சைக் கற்பூரத்தை எடுத்து திருவேங்கடவனின் திரு முகத்தில் அடிபட்ட இடத்தில் வைத்து அழுத்தினார். இரத்தக் கசிவு நின்றது. இன்றும் திருவேங்கடவனின் திருமுகத்தில் இருக்கும் பச்சைக் கற்பூரம் அவனது லீலையை உணர்த்துகிறது!.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s