நல்வாழ்வு

அவசர யுகம் என்றாலும் உணவு விஷயத்தில், சில ஒழுக்கங்களை கடைபிடித்தாக வேண்டும். உணவுக்காக சமையலறையில் செலவிடும் நேரத்தை, நல்வாழ்விற்காக செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும். அவசர வாழ்விற்கு விலக்கு, ‘உணவு’ அல்ல.

* சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், தும்மல் வந்தால் சுக்கு காப்பி என பாரம்பரிய ‘உணவு மருந்துகள்’ நகர வாழ்க்கையில் சாத்தியமா?

நம் உணவுப்பழக்கத்தில் பன்னாட்டு வணிகம் புகுந்ததால், இந்த கேள்வி எழுகிறது. சவுகரியம் வேண்டும் என்று கருதியதால், நம் உணவுப்பழக்கத்தில் வியாபாரம் புகுந்து விட்டது. உணவு விஷயத்தை பொதுமைப்படுத்த கூடாது. சைபீரிய உணவும், ஆஸ்திரேலிய உணவும், நமது உணவும் ஒன்றாக வராது. நமது காற்று, நமது மண், நம் சூழல் வேறு. நாம் எந்த மரபை ஒட்டி வாழ்கிறோம் என்பது முக்கியம். இட்லி, நமது மரபணுவில் ஊறிப்போனது. அதனை சாப்பிடும் போது, மரபணுக்கள் உணர்ந்து கொள்ளும். ஆனால் மயோனைஸ் தடவிய பர்கரை சாப்பிட்டால், அதனை உடல் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில், பணம் என நாம் அக்கறை கொள்வது போல, மரபை மறக்காமல் உணவு, வாழ்வியல் மீது அக்கறை காட்ட வேண்டும். முடிந்தவரை பன்னாட்டு உணவுகளை தவிர்த்து, நம் அருகாமையில் கிடைக்கும் பழம், காய்கறிகளை சாப்பிட வேண்டும். பிரச்னைகளுக்கு பிறகு, நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று இப்போது கூறுகிறார்கள். பாதுகாப்பா என்பது கேள்வி அல்ல; அவசியமா என கேட்கிறேன். பாரம்பரிய மருத்துவத்தில், நம் நோய் தீர்க்கும் அத்தனை மூலிகைகளும் உண்டு. சிலவற்றை மாடியில் வளர்க்கலாம். அதற்கான விழிப்புணர்வு தேவை. குறுந்தானியங்களை உணவில் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும்.

* குறுந்தானியங்களின் அதிக விலையால், நடுத்தர மக்கள் கூட வாங்கமுடியவில்லையே?

தினை, வரகு, கம்பு போன்றவற்றை ரேஷன் கடைகளில் விற்கும் நிலை வரவேண்டும். கரும்பு, நெல் போன்று இவற்றிற்கும் குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். குறுந்தானியம் பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் தர வேண்டும். அப்போது குறுந்தானிய பயன்பாடு பரவலாகும்.

அன்றைய காற்றும், தண்ணீரும் இன்று இல்லை. எனவே நாடி சாஸ்திரத்தின் அன்றைய இலக்கணமும் இன்று இல்லை. நாடிப்பிடிப்பின் நுண்கணிப்பு மாறிவிட்டது. ஏனெனில் மனிதனின் வாழ்வியல் மாறிவிட்டது. நாடிப்பிடிப்புடன் நவீன அறிவியலை பயன்படுத்தி, சித்தமருத்துவத்தை உள்வாங்க வேண்டும். இங்கு நோய் முக்கியம் அல்ல; நோயாளி தான் முக்கியம். எந்த வகையான நோயாளிjnஎந்த வாழ்வியல் சிக்கலில் உள்ளவர் என கவனிக்க வேண்டும். நவீன அறிவியலின் கண்ணோட்டத்தோடு பார்த்து, சித்தமருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். வருங்காலத்தில் கூட்டு மருத்துவ சிகிச்சை முக்கியத்துவம் பெறும். ஒரே மேஜையில் நவீன மருத்தவர், சித்த மருத்துவர், இயற்கை மருத்துவர் இருப்பார். வெளிநாடுகளில் இது பிரபலமாகி வருகிறது. சீனாவில், ஆங்கில மருத்துவத்தை விட பாரம்பரிய சீன மருத்துவம் பிரபலமாக உள்ளது.

* ஆரோக்கியமான உடலுக்கு, தினமும் என்ன செய்ய வேண்டும்?

தினமும் 45 நிமிடத்தில் 3 கி.மீ., நடைப்பயணம், 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, 7 மணி நேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். எங்கோ விளையும் ஆப்பிளை சாப்பிடுவதை விட, நம்மூர் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்களை காலை உணவுக்கு முன்பு சாப்பிடலாம்.

Advertisements

One thought on “நல்வாழ்வு

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s