வேதம்

வேதத்தில் அறிவுரைகள்: வேத நீதிகள் ;
(“வேதமும் பண்பாடும்” புத்தகத்தில் இருந்து….. )
நித்யமான வேதத்தில் நமக்கு எண்ணற்ற நீதிகளும், அறிவுரைகளும் கிடைக்கின்றன. இவைதான் நமக்கு பிரமாணம்.
குறிப்பாக யஜுர் வேதத்திலிருந்து மட்டும் ஒரு சிலவற்றைகளை தற்போது பார்ப்போம்.
* பகவானை நேசிப்பதை விட உன்னை பகவான் நேசிக்கும் படி நடந்துக் கொள் (தைத்திரீய ஸம்ஹிதை, முதல் காண்டம்).
* கடனாளியாக இராதே. (அச்சித்ரம், தைத்திரீய ஸம்ஹிதை)
* கல்போல் உறுதியாக இரு. (ஏகாக்நி காண்டம்)
* பிராஹ்மணர்களை தேவர்களுக்கு சமமாக பார். (தைத்திரீய ஸம்ஹிதை, முதல் காண்டம்)
* தினமும் காயத்ரி சொல்லி அர்க்யம் விடு (ஆரண்யகம், இரண்டாம் ப்ரஸ்னம்)
* தூரமானாளை (3 நாள்) பெண்களை நெருங்காமல் ஒதுங்கி இரு. (ஸம்ஹிதை, ஐந்தாம் காண்டம்)
* மனைவிக்கு உரிய இடம் கொடுத்து, அவளை மதிக்கக் கற்றுக்கொள். (மதிக்க வேண்டும் என்றால் அவளை கரிச்சிக் கொட்டாதே என்று பொருள்). (ப்ராஹ்மணம் அஷ்டகம்)
* பிறர் நிந்திப்பதால் மனம் ஒடியாதே. ஏனென்றால் நிந்திப்பவர்கள் நமக்கு அபகாரம் செய்வதாக நினைத்துக்கொண்டு மறைமுகமாக உபகாரமே பண்ணுகிறார்கள். நமக்கு கர்மா கழிகின்றது. இந்த நுட்பத்தை அறிந்தவர், தம்மை யாரேனும் இகழ்ந்தால் நல்லதே என்று வசைகளை ஆவலுடன் எதிர் நோக்குவர். (ப்ராஹ்மணம் இரண்டாம் அஷ்டகம்)
* தானம் வாங்கினால் நல்லவர்களிடமிருந்து மட்டும் வாங்கு. (ப்ராஹ்மணம் முதல் அஷ்டகம்)
* மங்களகரமாகவே பேசு (ஆரண்யகம்)
* அன்னத்தை குறை சொல்லாதே; அன்னத்தை எறியாதே. ஸம்ருத்தியாக தினந்தோறும் சமையல் செய். இவைகளை வ்ரதமாக ஏற்றுக் கொள் (யஜுர் வேதம் ப்ருகுவல்லி உபநிஷத்)
* விழித்திருப்பவனுக்குத்தான் வித்யை வரும்.
* முன்னோர்கள் சென்ற பாதையில் பார்த்துப் போகிறவர்கள் ச்ரேஷ்டர்கள்.
* நல்ல காரியங்களைச் செய்வதில் சோம்பல் வேண்டாம்.
* அந்த பரமாத்மாவை பார்க்க வேண்டுமாகில் அவரையே கேட்க வேண்டும். அவரையே நினைக்க வேண்டும். அவரையே தியானம் செய்ய வேண்டும்.
மேலும் சில… வேத நீதிகள்:
* வேதம் ஓதாமல் வேறொரு கல்வியில் உழைக்காதே.
* கள் குடிக்காதே, குடித்தவனை நெருங்க விடாதே
* வேதம் ஓத காரணத்தை தேட வேண்டாம். காரணம் தேவையில்லை. அது கடமை.
* அமங்களச் சொற்களை தவிர்க்கவும்.
* வேதத்தை நெட்ருப்பண்ணி முகஸ்தமாக்கிக் கொள்.
* சுறுசுறுப்புடன் குருமுகமாகத் தான் வேதம் கற்க வேண்டும்.
* தொடர்ந்து மூன்று தலைமுறைகள் வேதாத்தியயனம் விட்டுப் போக விடாதே.
* வேதாத்தியயனம் செய்வதும், வேதம் கற்றுத் தருவதும் தபஸ்ஸாகும்.

Advertisements

One thought on “வேதம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s