நாம ஜப மகிமை

தர்ம சாஸ்த்ரப்படி ஒருவன் நடப்பதென்பது கலியுகத்தில் மிகவும் கஷ்டமான காரியம். ஆனால் தர்மசாஸ்த்ரங்கள் விதித்த பகவந்நாம கீர்த்தனம் யாவராலும் ஸுலபமாகச் செய்யமுடியுமே! பகவந்நாம கீர்த்தனத்தைச் செய்துவிட்டால் தர்மசாஸ்த்ரத்திலுள்ள ஸகல தர்மங்களையும் யதாவிதி அனுஷ்டித்ததாகி விடுமென்று தர்ம சாஸ்த்ரமே ஒப்புக் கொள்கிறது.
——————————————————–

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி ராமேதி ஸஞ்ஜபன் ஹரிதத்பர
ராஜஸூயஸஹஸ்ராணாம் பலமாப்னோதி மானவ;”… !!!

க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்று ஹரிநாம கீர்த்தனம் செய்வானானால் ஆயிரம் ராஜஸூயங்கள் செய்த பலனை அடைவான் என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி கூறுகிறது.
———————————————————————————
விஸருதாநி பஹூன்யேவ தீர்த்தானி விவிதானி ச|
கோட்யம்ஸேனாபி துல்யானி ஹரேர்நாம ஜபேன வை … !!!

கணக்கு வழக்கற்ற புண்ய தீர்த்தங்களைக் கேள்விப் படுகிறோம். அவை ஹரிநாம ஜபத்தின் மஹிமையில் கோடியில் ஒரு பங்குகூட ஆகாது என்று விச்வாமித்ர ஸ்ம்ருதி கூறுகிறது.
—————————————————————————————————

ஹரேர் நாமபரம் ஜாப்யம் த்யேயம் கேயம் நிரந்தரம்|
கீர்த்தனீயஞ்ச ஸததம் நிர்வ்ருதிம் பஹுதை சதா … !!!

மோக்ஷத்தை விரும்புகிறவன் அனவரதமும் ஹரி நாமத்தையே ஜபம் செய்ய வேண்டும். ஹரி நாமத்தையே த்யானம் செய்ய வேண்டும் என்று ஜபாலி ஸ்ம்ருதி கூறுகிறது.

—————————————————————————————————
ஸர்வபாப யுதோ யஸ்து ந்ருஹரேர் நாம கீர்த்தனாத்
விமுச்ய ஸர்வதுர்காணி யாதி ப்ரும்ம ஸனாதனம் … !!!

ஸகல பாபங்களையும் செய்தவனாயினும் நரஸிம்ம நாமத்தைக் கீர்த்தனம் செய்பவன் ஸகல கஷ்டங்களையும் தாண்டி ஸனாதனமான ப்ரும்மத்தை அடைகிறான் என்று காலவ ஸ்ம்ருதி கூறுகிறது.

இவ்வாறு கணக்கு வழக்கற்ற ஸ்ம்ருதிகள் பகவந்நாம கீர்த்தன வைபவத்தைச் சொல்லுகின்றன.
—————————————————————————————————
ஹரி ராமா கிருஷ்ணா கோவிந்தா நாராயணா …!!!
ஹரி ராமா கிருஷ்ணா கோவிந்தா நாராயணா …!!!

ஹரி ராமா கிருஷ்ணா கோவிந்தா நாராயணா …!!!
ஹரி ராமா கிருஷ்ணா கோவிந்தா நாராயணா 

Advertisements

One thought on “நாம ஜப மகிமை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s