அனாயஸ மரணம்

image

ஒரே ஒரு அனுக்ரஹம்!

அறுபது வயதை தாண்டிய அந்த பக்தர், நித்யம் ஶசிவபூஜை பண்ணுபவர். வெளியூர்வாஸியான அவர், பெரியவாளை தர்ஸனம் பண்ண, காஞ்சிபுரத்துக்கு வந்து, ஒரு ஹோட்டலில் இறங்கி, ஸ்நானத்தையும் பூஜையையும்  முடித்துக்கொண்டு கொண்டு, மடத்துக்கு வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்.

” பரமேஸ்வரா….எனக்கு ஒண்ணே ஒண்ணை மட்டும் அனுக்ரஹம் பண்ணணுன்னு வேண்டிக்கிறேன்….”

பெரியவா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

” எனக்கு அனாயாஸ மரணம் கெடைக்கணும்”

மனஸில் அழுத்தித் கொண்டிருந்த மரண பயத்தால், அபயம் வேண்டி, ப்ரார்த்தித்துக் கொண்டார்.

(அனாயாஸ மரணம் என்றால், ரொம்ப நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்து, குடும்பத்தில் உள்ளவர்க்கெல்லாம் கஷ்டம் குடுத்து, “போனால் தேவலை” என்று தான்.. உள்பட எல்லாரும் நினைக்கும்படி படுத்தி, ஒரு வழியாக போய் சேர்வது என்றில்லாமல், நொடியில் லகுவாக சட்டென்று உயிர் போய்விடுவது என்பதாகும்)

“நீ தினமும் பூஜை முடிக்கறச்சே சொல்ற ப்ரார்த்தனை ஸ்லோகமா இதை சொல்லு…..

அனாயாஸேன மரணம் வினா தைன்யேன ஜீவனம் !
தேஹி மே க்ருபயா ஶம்போ த்வயி பக்திம் அஸஞ்சலாம் !!

இத சொல்லிட்டு, த்ரயம்பக மந்த்ரம் சொல்லிண்டிரு……..”

ப்ரஸாதம் குடுத்தார். பெரியவா திருவாக்கால், எப்பேர்ப்பட்ட மந்த்ரோபதேஸம்!

பக்தர் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு காஞ்சியில் அவர் தங்கியிருந்த ரூமுக்கு போய் கதவை திறந்து நாற்காலியில் உட்காரும்வரை பெரியவாளுடைய ஆக்ஞைப்படி ‘அனாயாஸேன மரணம்’ என்ற ப்ரார்த்தனையையும், ம்ருத்யுஜ்ஜய மந்த்ரத்தையும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவர் நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த க்ஷணம், அவருடைய ப்ரார்த்தனையை, நம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான பெரியவா அனுக்ரஹித்து விட்டார்!

ஆம்! அவர் “அனாயாஸமாக” ம்ருத்யுவை ஜெயித்து, ஶசிவ ஸாயுஜ்யத்தை பெற்றுவிட்டார்!

பெரியவா அவருக்கு ப்ரஸாத ரூபத்தில், “மரணமில்லாப் பெருவாழ்வு”க்கான entrance ticket-ஐயும் சேர்த்தல்லவா குடுத்திருக்கிறார்! என்ன பாக்யம்!

ஸாதாரணமாக, நாம் யாராவது ரொம்ப ஸீரியஸ் கண்டிஷன்ல இருந்தால், அவர்கள் பிழைக்கணும் என்பதற்காக ம்ருத்யுஜ்ஜய ஹோமம் பண்ணி, அவர் [சரீரம்] பிழைத்தால், பகவான் காப்பாற்றிவிட்டான் என்று ஸந்தோஷப்படுவோம். ஆனால் உண்மையில் ம்ருத்யுவை [மரணம்] ஜெயிப்பது என்றால் இனி பிறவி வருமோ எனும் பயத்தை வேரோடு கெல்லி எறிந்து, இந்த ஜன்மாவிலேயே, உயிரோடு இருக்கும் போதே ஆத்மானுபவத்தை பெறுவதுதான்!

Advertisements

One thought on “அனாயஸ மரணம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s