கோபத்தை விட்டொழி

உண்மையான…..
இறை பக்தி என்பது என்ன?

கோபம் பாவம் செய்வதற்கான வழிகாட்டி. கோபத்தால் புத்தி தடுமாறுவது மட்டுமல்ல. புத்தி தடுமாற்றத்தால் எல்லோரும் நம்மை சபிக்க வைத்து நம்மை சண்டாளனாக, நம்மை பாவியாக நம்மை நாமே உருவாக்கி கொள்ள காரணமாக அமைந்து விடுவோம். கோபத்தின் விளைவாக நம்முடைய பொறாமை, மற்றவர்களுக்குத் தீங்கு நினைப்பது போன்ற தீய எண்ணங்கள் நம் உள்ளத்தில் உடனே எழுந்து விட்டாலே நாம் எவ்வளவுகாலம் இறைவனை நினைத்து தவம் செய்தாலும் நம் மனதில் இந்த தீய எண்ணங்கள் உருவானதால் நாம் என்ன தான் ஞானம் பெற்றதாய் பீற்றி கொண்டாலும் ஞானம் அடைந்ததில் இருந்து நாம் நழுவி விடுகிறோம்.

உண்மையான இறை தவம் என்பது மற்றவர்களுக்குத் தீங்கு செய்யும் எண்ணமே வரக்கூடாது . இது வந்த பிறகு ஐயோ! இத்தனை காலம் பாடுபட்டுச் சேமித்த இறை ஆற்றல் அனைத்தும் வீணாகி விட்டதே என்று வருத்தப்படுவதால் எந்த பிரையோஜமும் இல்லை. ஆகவே, நமக்கு ஞானம் வேண்டுமானால் நம்மிடமுள்ள அதே ஆத்மாதான் உயர்ந்தவையும் தாழ்ந்தவையுமான எல்லா உயிர்களிடமும் குடிகொண்டிருக்கிறது என்று நாம் நினைக்க வேண்டும்.

ஆனால் இவையெல்லாம் மறந்து நாம் உணர்ச்சி வசப்பட்டு கோபத்தினை வெளிப்படுத்தினால் இத்தனை நாள் தவமிருந்து கிடைத்த இறை ஞானம் நம்மைவிட்டு பறிபோவதோடு மட்டுமல்லாமல், தகுந்த முறையில் கடவுளை வணங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் தன் நாவை அடக்காமல் தன் உள்மனதை ஏமாற்றிக் கொண்டிருந்தால், அவருடைfய வணக்க முறை வீணானதாகவே இருக்கும்.

ஓம் நமசிவாய.

One thought on “கோபத்தை விட்டொழி

Leave a comment