வாழும் முறைகள்

image

பெரியவா சொல்படி வாழும் முறையும், வயஸான பஶுக்கள் ஸம்ரக்ஷணையும்……….
1. காலை ஸூர்யோதயத்துக்கு முன்னால் வீட்டில் உள்ள குழந்தைகள், வ்யாதியஸ்தர்கள், மிகவும் வயஸானவர்கள் தவிர, மற்ற அனைவரும் எழுந்துவிட வேண்டும்.
2. ஆண், பெண் இருவருமே எப்போதுமே நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டும்.
3. வீட்டில் காலை, மாலை [ஸந்த்யா காலம்] விளக்கேற்ற வேண்டும். நல்லெண்ணெய், நெய் இவற்றால் ஏற்றலாம். வீட்டு வாஸலில் விளக்கு வைப்பது, துர்ஶக்திகள் வீட்டுக்குள் வராமல் ரக்ஷிக்கும்.
4. பெண் குழந்தைகள், கன்யா பெண்கள், ஸுமங்கலிகள் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும். கருப்பு பொட்டு அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வைத்துக் கொள்வதும், வைத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான்.
5. பெண் குழந்தைகள், கல்யாணமான பெண்கள் தோடு, வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது. தங்கத்தில் பண்ணிய மெட்டி, கொலுஸு இவைகளை பெண்கள் காலில் அணியக்கூடாது. தங்கத்தில் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கிறாள்.
இப்போது ஜீன்ஸ் பான்ட் போட்டுக் கொள்வதற்காக, திருமாங்கல்யத்தையே கழட்டி வைத்துவிட்டு போகும் அளவு பெண்கள் ‘முன்னேறியிருக்கிறார்கள்’. பெண்கள் செய்யும் இந்த மாதிரி பல ஆகாத கார்யங்களாலும், ‘பணத்தையும், ஸ்டேடஸ்ஸையும், வெளிநாட்டு மோஹத்தையும்’ மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, பெற்ற குழந்தைகளிலிருந்து, புருஷன், மாமனார், மாமியார் அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, “தான், தன் சுகம் ” என்று மட்டுமே வாழ்வதாலும், அப்படிப்பட்ட பெண்களை, அவர்களுடைய பெற்றோரும் திருத்தாமல், ஊக்குவிப்பதாலும், அவர்களுடைய இன்றைய கல்யாண வாழ்க்கை, நிம்மதியில்லாமலும், கணவனிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் பிரிந்து தனிமைப்படுத்தப்பட்டும், அமங்கலமாக இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
6. குழந்தைகளுடைய பர்த்டே அன்று மெழுகுவர்த்தி ஏற்றி அதை வாயால் ஊதி அணைப்பது அமங்கலம். குழந்தைகளை விட்டு விளக்கை ஏற்றச் செய்யலாம். நக்ஷத்ரம் வரும் நாள்தான் முக்யம். அன்று கோவிலுக்கு கூட்டிச் சென்று, ஸ்வாமிக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்யலாம். வேத பாடஸாலைகளுக்கோ, ஏழைக் குழந்தைகளுக்கோ, பஶுமாடுகளை ரக்ஷணை செய்யும் இடங்களுக்கோ, நம்முடைய ஶ்ரீமடத்துக்கோ, போய் இயன்றதைக் குடுக்கலாம். குழந்தைகளை விட்டே இந்த நல்ல தர்மத்தை செய்யச் சொல்லலாம்.
7. ப்ராஹ்மணர்கள் என்று மற்ற விஷயங்களுக்கு காட்டிக் கொள்ள விரும்புபவர்கள், முதலில் ஒழுங்காக ஸந்த்யாவந்தனத்தை செய்யவேண்டும். வெறும் காயத்ரி மந்த்ரத்தை மட்டும் சொல்லுவது கூடாது. அர்க்யம் விட்டு முறையாக பண்ண வேண்டும்.
8. ப்ராஹ்மணர்கள் அசைவமான முட்டை போட்ட கேக், பிஸ்கட் மட்டுமில்லாமல், அசைவ உணவையும் ஸாப்பிடுவது மஹா பாபமான செயல்.
9. மது, ஸிகரெட், மற்றும் போதை வஸ்துக்களை பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு பல ப்ராஹ்மணர்கள், ப்ராஹ்மண பெண்கள் கூட, இம்மாதிரி பல கெட்ட வழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பது வெட்கக்கேடான விஷயம். பஶு மாம்ஸம் உண்ணும் ப்ராஹ்மணர்கள் [என்று சொல்லிக் கொள்பவர்கள்] எத்தனை பூஜையோ, வ்ரதமோ இருப்பதால் இந்த பாபத்தை எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் போக்க முடியாது.
10. பெண்கள் எப்போதுமே புடவைதான் கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்களே, கால்கள் தெரியும்படி ட்ராயர் போன்றவற்றை அணியாமல், வேஷ்டி அணிய வேண்டும் எனும்போது, பெண்கள் இப்போது வீட்டிலும், வெளியிலும் அணிந்து செல்லும் உடைகள், ஆண்களை விட மோசமாக இருக்கிறது.
11. கோவிலுக்கோ, மஹான்களின் ஆஶ்ரமங்களுக்கோ செல்லும் போது, கட்டாயமாக, ஆண்கள் வேஷ்டியும், பெண்கள் புடவையும், பெண் குழந்தைகள் பாவாடை சட்டையும், கன்யா பெண்கள் தாவணியும் அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும். அதையும் கௌரவமான முறையில் அணிய வேண்டும். எப்போதுமே பிறர் கவனத்தை திசை திருப்பும்படியான உடைகளையோ, நகைகளையோ அணிந்து செல்லக் கூடாது.
12. பெண்கள் வீட்டிலும், வெளியிலும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. இழவு விழுந்த வீட்டில்தான், தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருப்பார்கள். பெண்கள் தலையை முடிந்து கொள்ளாத வீட்டில் தரித்ரம் தாண்டவமாடும். லக்ஷ்மீகரம் போய்விடும். லக்ஷ்மீகரம் என்றால் வெறும் பணம் காஸு மட்டுமில்லை. மனஸில் ஸந்தோஷம், குடும்பத்தில் அமைதி, நிம்மதி இதெல்லாம்தான் உண்மையான லக்ஷ்மீகரம்.
13. இன்றைக்கு ப்ராஹ்மணர்கள் வீடுகளில்தான், வெங்காயம், பூண்டு இல்லாத ஸமையலே இல்லை. அசைவம் ஸாப்பிடுபவர்கள் கூட, நாள்,கிழமை, அமாவாஸ்யை, மாஹாளயம், நீத்தார் கடன் என்ற திவஸம் போன்ற நாட்களில் மிகவும் ஶுத்தமாக, பயபக்தியோடு இருப்பார்கள். பிறப்பினால் எதுவும் இல்லை; நாம் அப்படி மேன்மையாக வாழ்ந்தால்தான் பெருமை. இல்லாவிடில் வெறும் குலத்தால் எந்த பயனுமில்லை.
14. ஹோட்டல்களில் ஸாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால், ஸுகாதாரமும் கெடும், நம் ஶரீரமும் கெடும், மனதும் கெடும்.
15. காலையில் ஹரி நாமத்தையும், மாலையில் ஶிவ நாமத்தையும், இரவு தூங்கும் முன், அம்பாளையும் த்யானிக்க வேண்டும்.
16. லீவு நாட்களிலாவது, காலை எழுந்து, குளித்து கோவிலுக்குச் சென்று ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். தினமும் ‘walking’ செல்பவர்கள், ஒரு குளியலைப் போட்டுவிட்டு, கோவிலை ப்ரதக்ஷிணம் செய்தால், ஶரீர ஸௌக்யத்தொடு, ஆத்ம லாபமும் கிடைக்கும்.
இதெல்லாம் யாரால்? அதுவும் இந்தக் காலத்தில் எப்படி முடியும்? என்று பலபேர் எண்ணலாம். ஆனால், பெரியவா சொல்வது நம்முடைய நன்மைக்குத்தான்! என்பதை நம்புபவர்கள், தங்களைத் தாங்களே வெகு ஸுலபமாக திருத்திக் கொண்டுவிடலாம்.
“காலம்” என்பது வேறு யாருமில்லை! நாம்தானே! பெரியவா மேல் உண்மையான அன்பு வைத்தால், எதுவுமே ஸாத்யந்தான்! பெரியவா சொல்படி வாழ்ந்தால், நமக்கு கிடைக்கும் ஸந்தோஷமும், நிம்மதியும் ஸாஶ்வதமாக இருக்கும்.
பெரியவாளை விட, பணமும், பகட்டும், நாக்கு ருசியும், தன்ஸுகமும் மட்டுந்தான் முக்யம் என்று நினைத்தால், இந்த பாபங்களிலிருந்து கிடைக்கும் ஸந்தோஷம் போன்றது, க்ஷணத்தில் காலனிடம் பறிபோய்விடும். அப்போது கதறி ப்ரயோஜனமில்லை!

Advertisements

One thought on “வாழும் முறைகள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s