தன்வந்தரி பகவான்

image

ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம்

நோயில்லாத வாழ்வுக்காக நாம் வழிபட வேண்டிய விசேஷ தெய்வம் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.
இவர் மகாவிஷ்ணுவின் அவதாரம்.
தேவர்களுக்குப பூரண வாழ்வை வழங்குவதற்காகத் திருப்பாற்கடல் கடையப்பட்டது அபோது கடலில் இருந்து காமதேனு ஐராவதம் கௌஸ்துபமணி மகாலஷ்மி போன்ற மங்கலமான அம்சங்களுடன் தன்வந்திரி பகவானும் அவதரித்தார் என்று புராணங்கள் கூறும். இவர் தன திருக்கரத்தில் வைத்திருக்கும் கலசத்தில் இருந்து வழங்கிய அமிர்தத்தை உண்டதனால்தான் தேவர்கள் பூரண ஆயுளைப் பெற்றார்கள். எனவே தன்வந்திரி பகவானை மருத்துவத் துறையின் பிதாமகன் என்பர்.
எந்த ஒரு தீராத நோய்க்கும் உடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு அவரது பிராச்சத்த்தைப் பெற்று உண்டால் நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. அவருக்கு அபிஷேகம் செய்து அந்தத் தீரித்தத்தை உட்கொள்ளலாம்.தவிர தன்வந்திரி பகவான் பிரத்தியேகமாக எழுந்துளியிருக்கும் சில ஆலங்களில் கிடைப்பதற்கு அறிய மூலிகைகளைக் கொண்டு தாயாரிக்கப்பட்ட லேகியம் போன்றவைகளை பிரசாதமாக தருகிறார்கள். சிறந்த பண்டிதர்களை வைத்து வீட்டிலேயே தன்வந்திரி ஹோமம செய்யலாம்.பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான், இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி பலரையும் அடைய வேண்டுமென முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேத்த்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. அதனால் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுவது நல்லது.தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தார் என்கிறது மத்ஸ்ய புராணம். இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருந்துவர் இன்றும் குறிப்பிடுகிறது.இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி செவ்வரியோடிய கண்கள் வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து பரந்த மார்பு பட்டுப் பீதாம்பரம் மலர்மாலைகள் தரித்த ஆபரணத் திருமேனி நான்கு திருக்கரங்கள் மேல் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து காணப்படுவார். கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டைப் பூச்சியையும் மற்றொன்றில் அம்ருத கலசத்தையும் தாங்கிக் காணப்படுவார். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள பகவான் அட்டைப் பூச்சிக்கு பதிலாக ” சீத்தில் ” என்ற மூலிகைக் கோடியை ஏந்தியபடி காணப்படுகிறார்.துளசி ஆலிலை அரசு இலை வில்வம் விஷ்ணு கிராந்தி நாயுருவி மருக்கொழுந்து பூர்ஜ இலை தேவ தாரு இலை போன்ற இலைகளும் செவ்வந்தி சண்பகம் பிச்சி பாரிஜாதம் தாமரை அரளி புன்னைப்பூ மந்தாரை போன்ற பூக்களும் இவரது பூஜைக்கு உரியவை மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான கோதுமை அல்வா அல்லது சுக்குவெல்லம் செய்து தன்வந்திரிக்கு நைவேதிப்பது சிறந்தது!!!.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s