பார்பாரிகன்

image

வழக்கத்திற்கு மாறாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்த கிருஷ்ணரை ஆச்சரியமாக பார்த்தார் தருமர்.
கிருஷ்ணா.. என்ன தீவிர யோசனை.? என்றார் தர்மர்.
பீமனாலேயே நாம் போரில் தோற்றுவிடுவோமோ என்றுதான் யோசிக்கிறேன்.. என்றார் கிருஷ்ணர்.
பீமனாலா.. நாமா.. தோற்பதா.?
ஆச்சரியமாய் கேட்டார் தர்மர்.
ஆம்.. பீமனாய் இருந்தாலும்,
அவன் பேரனாய் இருந்தாலும் ஒன்றுதானே..என்றார் கிருஷ்ணர்.
யார்.. பார்பாரிகனை சொல்கிறாயா கிருஷ்ணா..?
அவன் போரில் நம் பக்கம்தானே போரிடுவான்.? என்றார் தர்மர்.
அவன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியம் காரணமாக படைகளின் அளவில் வலிமை குறைந்த நம் பக்கம் நின்றுதான் போரிடுவான்.
ஆனால்.. கௌரவர் படையின் வலிமை போர்க்களத்தில் குறையும்போது அவர்பக்கம் நின்று நம்மை எதிர்ப்பானே..
யார் குறைந்த வலிமை கொண்டவர்களோ.. அவருக்கு சாதகமாகத்தான் அவன் போரிட வேண்டும் என அவன் தாயான அகிலவதி சத்தியம் வாங்கி இருப்பதை மறந்தீரோ தர்மரே..?
என்றார் கிருஷ்ணர்.
அப்படித்தான் போர் புரியட்டுமே..
அர்ஜுனன்..பீமன் போன்றவர்கள் நம்முடன் இருக்கும்போது ஏன் கவலைப் படுகிறாய் கிருஷ்ணா.?
கேட்டார் தர்மர்.
சிரித்தார் கிருஷ்ணர் தர்மரை நோக்கி..
ஆயிரம் அர்ஜுனன்களும், ஆயிரம் பீமன்களும் ஒண்றினைந்து எதிர்த்தால் கூட அவனை வெல்ல முடியாது தர்மரே. ஏன் நானே அவன் எதிர் நின்றால் கூட வென்றிடுவான்.
காரணம் சிவனால் அவனுக்கு அளிக்கப் பட்ட மூன்று அஸ்திரங்கள். எவராலும் தடுத்து நிறுத்த முடியாத மூன்று பாணங்கள் அவை. அதனாலேயே..
அவனுக்கு திரிபாணி என்ற பெயரும் உண்டு…
என்றார் அமைதியாக.
அப்படியா..? அதிர்ச்சியுடன் கேட்டார் தர்மர்.
அது மட்டுமல்ல.. மூவுலககையும் அழிக்கக் கூடிய அஸ்திரமும் அக்னி தேவனால் அவனுக்கு வழங்கப் பட்டுள்ளது.
இதையெல்லாம் பிரயோகிக்க போரை எதிர் நோக்கி இருக்கிறான் அவன்..
சொன்ன கிருஷ்ணரை பயத்துடனே கேட்டார் தர்மர்.
கிருஷ்ணா.. பார்பாரிகனை நம்பக்கமே இருக்க வைக்க வழி ஏதும் இல்லையா..?
ஏக்கத்துடன் கேட்டார் தர்மர்.
அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..
என்றார் கிருஷ்ணர்.
கலங்கிய மனதுடன் விடைபெற்றான் தர்மர்.
கூடவே கிருஷ்ணர் காப்பார் என்ற நம்பிக்கையும் அவருடன் சென்றது.
மறுநாள்… விடியலிலேயே தன்னைக் காண கிருஷ்ணர் வந்திருப்பதை அறிந்த பாரிகன் ஆனந்தம் அடைந்தான். அவரை வரவேற்றான். தாள் பணிந்தான்.
பாரிகனே.. நீ கடோத்கஜனின் மகன் என்பதை உன் பணிவே காட்டிக் கொடுக்கிறது…
என்றார் கிருஷ்ணர்.
அவரில்லையேல் நானேது.?
என்றான் பாரிகன்.
நல்லது. உன்னிடம் ஒரு சிறு விண்ணப்பம். அதை நாடியே உன்னிடம் வந்தேன்…
என்றார் கிருஷ்ணர்.
பரம்பொருளே.. கட்டளை இட வேண்டியவர் விண்ணப்பிப்பதா.?
என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.. என்றான் பாரிகன்.
பாரதப் போரில் நீ எவர் பக்கமும் பங்கேற்று போர் புரியக் கூடாது என கேட்கவே வந்தேன்..
என்ற கிருஷ்ணரை வியப்புடன் பார்த்தான் பாரிகன்.
நான் இந்த பாரதப் போரைக் காணவேண்டும் என பேராவல் கொண்டுள்ளேனே..
என்றான் பாரிகன்.
அதற்கு நான் பொறுப்பு. என் சக்தியின் மூலம் போரின் நிகழ்வுகளை நீ முழுதும் காண்பாய்.. என உறுதியளித்தார் கிருஷ்ணர்.
போரின் முதல்நாள்..
பாண்டவரின் வெற்றிக்காக..
தன் தலையை தானே தன் வாளால் வெட்டி கிருஷ்ணரின் கையில் கொடுத்தான் கடோத்கஜனின் மைந்தன்..
எதிர்த்து நிற்க எவருமற்ற வீரன்..
பீமசேனரின் பேரன்..
பார் பாரிகன்.
கிருஷ்ணரும் தன் சக்தியை அந்த தலைக்கு அளித்து.. ஒரு உயரமான குன்றின் மேல் வைத்து.. பாரதப் போரின் அனைத்து நிகழ்வுகளையும் அவன் காணும்படி செய்தார்.
போர் முடிந்ததும்.. பாரிகனின் தலை தன் காணும் சக்தியை இழந்ததும்… கிருஷ்ணராலேயே அடக்கம் செய்யப்பட்டது.
காலங்கள் பல கடந்தன.
ஒரு அந்தணர்க்கு இறையால் பாரிகனின் தலை புதைக்கப்பட்ட இடம் உணர்த்தப் பட்டது.
அவர் அந்த இடத்தில் தலையை மட்டும் கொண்ட சிலையை வைத்து பூஜித்தார்.
கிருஷ்ணரின் சக்தியைப் பெற்றதனால்.. கிருஷ்ணரின் இன்னொரு பெயரான சியாமளன் என்ற பெயர் இவருக்கு அளிக்கப் பட்டும்.. நாளடைவில் அது ஷியாம் என மருவி.. காட்டில் கிடைத்ததினால்.. இவர் காட்டு ஷியாம்ஜி ஆனார்.
இவருக்கான கோவில்கள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலும்..

Advertisements

One thought on “பார்பாரிகன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s