என்கூட வாங்கோ!

image

புகழ் பெற்ற பல ஆலயங்களை உருவாக்கியவர் ஸ்ரீ கணபதி ஸ்தபதி. திருப்பதி கோவிலுக்குள் அன்றைய அரசாங்கம் செய்யவிருந்த மாற்றங்களை பெரியவாளிடம் முறையிட்டு தடுத்து நிறுத்தியவர்.பெரியவாளின் அனுக்ரஹத்துக்கு ரொம்பப் பாத்ரமானவர். ஸ்தபதியின் இளமைக் காலங்களில் அவர் பெரியவாளை தர்ஶனம் பண்ணியது ரொம்பக் குறைவு.

ஒருமுறை, அவருடைய அப்பா மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த போது பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்து கொள்ள இளையாத்தங்குடி வந்தார். அப்போது பெரியவா ஏதோ ஸதஸ்ஸில் இருந்தார். ஸ்தபதியைப் பார்த்ததும், அங்கிருந்து எழுந்து வந்து அவரைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்,

“ஒன்னோட எதிர்காலம் ரொம்ப க்ஷேமமா இருக்கும்! என்னோட வா…….”

ஸ்தபதியை ரொம்ப தூரம் தள்ளி இருந்த ஒரு ஸமாதிக்கு அழைத்துக் கொண்டு போனார்.

“இங்கியே வெளில நில்லு..”

உத்தரவிட்ட பின் பெரியவா மட்டும் அந்த ஸமாதிக்குள் சென்று விட்டார். ஸ்தபதி வெளியே நின்று கொண்டிருந்தார். இரவு கிட்டத்தட்ட பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. பெரியவா வெளியில் வரவேயில்லை.

ஸ்தபதிக்கோ ஒரே குழப்பம்! தனியாக நிற்கவும் பயம்! எல்லாவற்றுக்கும் மேல் பயங்கர பசி!

‘பெரியவா தன் பொறுமைக்கு ஸோதனை வைக்கிறாரோ?’ என்று நினைத்தார்.

இரவு ஒரு மணிக்குப் பின் பெரியவா வெளியில் வந்தார்.

ஒரே கும்மிருட்டு!

“எங்கடா…..அந்தப் பையன்?”

“இதோ….இங்க இருக்கேன் ஸ்வாமி ”

ஸ்தபதி, பெரியவாளுக்கு அருகில் வந்ததும், அவரையும் அந்த ஸமாதிக் கோவிலுக்குள் அழைத்துக் கொண்டு போனார். ஸுமார் பதினைந்து நிமிஷம் ஸ்தபதியின் தந்தையைப் பற்றிப் பேசினார். ஒரு உடைந்த தேங்காயை ப்ரஸாதமாகக் குடுத்தார். பெரியவா உள்ளே போகும்போது, கையில் தண்டத்தைத் தவிர எதுவும் இல்லையே! தேங்காய் எங்கிருந்து வந்தது! ஸ்தபதிக்கு ஒரே வியப்பு!

“நீ நன்னா….இருப்பே! நெறைய பாக்யம் கெடைக்கும்”

பரிபூர்ணமாக ஆஸிர்வதித்தார்.

அவருடைய தந்தையைப் பற்றி பேசினாரேயொழிய, அவருடைய உடல்நிலை பற்றி எதுவுமே சொல்லவில்லை.

[சில நாட்களில் தந்தை ஶிவபதம் அடைந்தார்.]

பெரியவா, ‘டக்’கென்று இருட்டில்  திரும்பி நடந்தார். அவரைத் தொடர்ந்து நடப்பது ஸ்தபதிக்கு அஸாத்யமாகிப் போனது! பெரியவா எங்கோ இருட்டில் மறைந்தே விட்டார்! ஸ்தபதியோ, இருட்டில் கஷ்டப்பட்டுத் துழாவி குத்து மதிப்பாக நடந்தார். பசி தாளவில்லை! இரவு ரெண்டு மணிக்கு எந்த வீட்டில் சோறு போடுவார்கள்?

திடீரென்று அவர் முன்னால் ஒரு எட்டு வயஸ் பாலகன், கட்டுக் குடுமியோடும், மஹா தேஜஸ்ஸோடும் நின்று கொண்டிருந்தான்.

இத்தனை மையிருட்டில், எங்கிருந்து வந்தான்! யார் இவன்?

பாலகன் மிகவும் உரிமையோடு அழைத்தான்….

“எங்கூட வாங்கோ”

மந்திரித்து விட்ட மாதிரி, அந்த பாலன் பின்னால் நடந்தார். கொஞ்ச தூரத்தில் வந்த ஒரு க்ராமத்தில், ஒரே ஒரு குடிஸையின் கதவு மட்டும் திறந்திருந்தது! உள்ளே விளக்கும் ஏற்றப்பட்டிருந்தது, அத்தனை ராத்ரியில்!

உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி ஒரு வாழையிலை போடப்பட்டு, ஆவி பறக்கும் அன்னம் வெள்ளைவெளேறென்று பரிமாறப் பட்டிருந்தது! அதுவரை அப்படியொரு எளிமையான ஆனால் அதி ருஸியான ஸாப்பாட்டை அவர் இதுவரை ஸாப்பிட்டதே இல்லை!

வயிறும், மனஸும் ஏகமாக குளிர்ந்து போய், அந்த பாலனை வாழ்த்தி நன்றி சொல்லத் தேடினார்……காணவில்லை!

“பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரி மாதா அன்னபூர்ணேஶ்வரி!!” என்று இந்த லோகத்தில் உள்ள அனைத்து ஜீவராஸிகளுக்காகவும் அன்னையிடம் பிக்ஷை கேட்ட ஶ்ரீ ஶங்கரபகவத்பாதரான, அந்த பால ஶங்கரனே ஸ்தபதியின் உள்ளத்தை முழுக்க அப்போது ஆக்ரமித்திருந்தார்.

எறும்புக்கு, தன் முன்னால் இருக்கும் ஒரு கைப்பிடி அரிசியும், கரையானுக்கு சின்ன மரத்துண்டும், மஹாப்பெருஸாக தோன்றுவது போல், நமக்கு இந்த உலகம் தோன்றுகிறது. ஆனால் கைப்பிடி அரிசிக்கும், மரத்துண்டுக்கும் மேலாக எத்தனையோ விஷயங்கள் இருப்பது போல, இந்த உலகத்துக்கும் மேலாக, நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத அத்யாத்மிகமான விஷயங்கள் அனேகம்! எனவே, அதிகம் ஆட்டம் போடாமல், வாலைச் சுருட்டி வைத்துக் கொள்வதே நமக்கு நல்லது!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “என்கூட வாங்கோ!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s