அவரே நடத்திக்குவார்

image

வடக்கே ஸாமல்கோட் நகரில் பெரியவா முகாம். நல்ல கூட்டம். வரிஸையாக பக்தர்கள் ‘க்யூ’ வில் நகர்ந்து கொண்டிருந்தனர். பெரியவாளுடைய பரம பக்தர் ஒருவர் க்யூவில் நகர்ந்து கொண்டே, பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய கண்களுக்கு மட்டும் வித்யாஸமான ஒரு காக்ஷி தெரிந்தது.

பெரியவா யாரையோ அண்ணாந்து பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார் ! கும்பிட்டதோடு இல்லாமல், கன்னத்திலும் போட்டுக் கொண்டார் !

ஆனால் வெளியே பார்ப்பதற்கு பெரியவா ஸாதாரணமாக எல்லாரையும் ஆஸிர்வதிப்பது போல் இருந்தது. ஒரே உருவம் ஒரே நேரத்தில், ரெண்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தது !

மஹான்களின் ஸந்நிதியில் இந்த மாதிரி ஒரே ஸமயத்தில் பல வேஷங்களை அவர்கள் போடுவது ஒன்றும் புதுஸில்லை. வேடிக்கை என்னவென்றால், வேறு யாருடைய கண்ணுக்கும் இந்தமாதிரி பெரியவா அண்ணாந்து பார்த்து, யாரையோ கும்பிட்ட விஷயம் தெரியவில்லை! பக்தருக்கோ ஒரே நெருடல்! கேள்விக்குறி! ஒருவேளை ப்ரமையோ?

பக்தரின் முறை வந்ததும்……….இதோ பெரியவா முன் விழுந்து வணங்கிவிட்டு நின்றார். பக்தர் பேசும் முன், பெரியவா கேட்டார்…

“ஒன் கண்ணுக்கு அது தெரிஞ்சுதோ?”……….

ஆஹா! ஒரே ஒரு கேள்வியால், எப்பேர்ப்பட்ட தர்ஶனத்தை,  “ஸந்தேஹமே வேணாம்! ஸத்யந்தான்!” என்று நிவ்ருத்தி செய்து விட்டார்!

“ஆமா பெரியவா………..”

“ஸெரி.. ஸெரி. அவருக்கு ஒரு கோவில் கட்டு. என்ன? நீ என்ன ஒஸரத்ல அவரைப் பாத்தியோ…….. அதே ஒஸரம் இருந்தாப் போறும்”

பக்தர் ஏதோ கனவில் மிதப்பதைப் போல் உணர்ந்தார்.

ஆம்! அவர் பார்த்தது ஸாக்ஷாத் ஆஞ்சநேய ஸ்வாமியைத்தான்!

அந்த ஆனந்தமான அதிர்ச்சி பன்மடங்காகப் பெருகியது அந்தக் காக்ஷி ஸத்யமே! என்று பெரியவா அங்கீகரித்த போது! என்ன ஒரு பாக்யம்!

அவ்வளவுதான்! ஜோர் ஜோராக ஆஞ்சநேயஸ்வாமிக்கு ஆலயம் எழும்பியது. பெரியவா உத்தரவாயிற்றே!

ரொம்பக் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ண ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை அந்த பக்தர் வேண்டிக்கொண்டார். குறிப்பிட்ட நாளில் வேறு ஏதோ வேலை வந்துவிடவே, [புது] பெரியவாளால் வரமுடியவில்லை. கும்பாபிஷேகம் பண்ணுவது ஏனோ தடைபட்டது. ஓடோடி வந்தார் அந்த பக்தர்! மஹா பெரியவாளிடம்!

“பெரியவாதான் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்திக் குடுக்கணும்”

“என்னால எப்டிப்பா இப்போ வர முடியும்? நீ………பேசாம இரு! அவரோட கும்பாபிஷேகத்தை அவரே நடத்திக்குவார் !”  

அபயம் குடுத்தார்.

பக்தருக்கோ ஒன்றுமே புரியவில்லை. கும்பாபிஷேகத்துக்கு இன்னும் ரெண்டே நாட்கள்தான்!  எல்லா ஏற்பாடும் பண்ணியாகிவிட்டது!

பெரியவா திருவாக்கில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு அமைதியாக இருந்தார்! ரெண்டு நாட்களுக்கு அப்புறம்தான் பெரியவா சொன்னதின் அர்த்தம் புரிந்தது!

குடம் குடமாக தீர்த்தங்களைக் கொட்டி அபிஷேகம் பண்ணுவது போல், படு பயங்கரமான மழை! அதோடு இல்லாமல் தன் புத்ரனுக்காக சண்ட மாருதமாக வீசி, வாயுபகவான் தன் மகிழ்ச்சியை எல்லோருக்கும் உணர்த்தினார்..! அதைத்தான் பெரியவா சொன்னார்………

“அவரோட கும்பாபிஷேகத்தை அவரே நடத்திக்குவார்!”

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “அவரே நடத்திக்குவார்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s