நாம ஸங்கீர்தனத்தின் சிறப்பு

image

த்யாயன் க்ருதே, யஜன் யக்கைஞ:
த்ரேதாயாம் – த்வாபரே அர்ச்ச்சயன் .
யதாப்நோதி, ததாப்நோதி
கலௌ சங்கீர்த்ய கேசவம் — என்று விஷ்ணு புராணம் கூறுகிறது
கிருதயுகத்தில் தியானமும் திரேதாயுகத்தில் யாக யக்ஞங்களும் துவாபர யுகத்தில் அர்ச்சனைகளும் செய்தால் என்ன பலன் கிட்டுமோ அதே பலன் நாம சங்கீர்த்தனத்தில் கிடைக்கும் என்று கூறுகிறது. நாம சந்கீர்தனத்தின் சிறப்பு இதிலிருந்து விளங்கும்.

இதே சிறப்பை பாகவத புராணம் பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில் கூறுகிறது
நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வபாப ப்ரணாசனம் |
ப்ரணா மோதுக்க சமனார்த்தம் நமாமி ஹரிம் பரம் ||
எவரது பெயரை உச்சரித்தால் எல்லாப் பாவங்களும் அழியுமோ அந்த உன்னதப் பரம்பொருளான ஹரியை நமஸ்கரிக்கின்றேன்.

பிரகலாதனை ஹிரண்யகசிபு ஆசையோடு, “மைந்தா ! குருகுலம் சென்று வந்தாயே. உன் குரு என்ன கற்பித்தார் என்று கேட்கிறான்
பிரகலாதன் கூறுகிறான் :
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாதஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
சக்யம் ஆத்ம நிவேதனம்
அந்த பரமனின் பெருமையை கேட்பது, பாடுவது, தியானிப்பது, பாத சேவை செய்வது, அர்ச்சிப்பது, பூஜிப்பது, அடியாராக இருப்பது, நண்பனாக பாவிப்பது, தன்னை அர்பணிப்பது ஆகிய பக்தி முறைகளை தான் கற்றதாகக் கூறும்போது, அங்கு கீர்த்தனம் என்ற இறைவன் புகழ் பாடுதல் குறிப்பிடப்படுகிறது

ரிக் வேதம் கூறுகிறது :
ஆஸ்ய ஜானன்தோ நாம சித்திவக்தன |
மஹஸ்தே விஷ்ணோ சுமதிம் பஜாமஹே ||
மானிடப் பிறவிகளே ! ஞானம் கிட்டவில்லை என்றால் இறைவனின் திருநாமத்தை உள்ளன்போடு இறைவன்தான் உண்மை பரம்பொருள் என்ற நம்பிக்கையோடு ஒருமுறை நாமசங்கீர்த்தனம் செய்யுங்கள். ஞானம் பெறுவீர்கள்.

யஜுர் வேதம் கூறுகிறது
வ்ருஹதே விஷ்ணோ சுமதிம் யஜாமஹே ||
கீதையில் கண்ணன் கூறினான் :
யக்ஞானாம் ஜபயக்ஞோ அஸ்மி ||
மரணப் படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்கிறார். கண்ணனின் அருகிலிருந்த யுதிஷ்டிரன் ஒரு கேள்வி கேட்டார். அதற்க்கு பீஷ்மர் விளக்கம் அளித்தார் :
யுதிஷ்டிரர் கேட்டார்:
கோதர்ம : சர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சார பந்தனாத் ||
எந்த தர்மத்தால், பிறவி எடுத்தவர்கள் ஜபித்து ஜனன மரண துக்கத்திலிருந்து விடுதலை பெற முடியும்
பீஷ்மர் பதிலளித்தார் :
எஷ மே சர்வ தர்மாணாம் தரமோ திகதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்ச்சேன் நர: சதா ||
யாரொருவன் உண்மையான உள்ளன்போடு தாமரைக் கண்ணனான இறைவனை அர்ச்சித்தும் அவன் பெருமைகளை பாடியும் வருகிறானோ அவன் விடுதலை பெறுகிறான்.

ஆதி சங்கரர், விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தில் நாம சங்கீர்தனத்தின் பெருமையை மேலும் சிலாகித்து கூறினார். நாம சங்கீர்த்தனம் செய்வதால் எந்தவித சிரமமும் கிடையாது என்பதே அதன் பெருமை. மிருக பலியோ அல்லது உடலை வருத்துவதோ மற்ற யஞ்க முறைகளிலும் கர்மங்களிலும் உண்டு. ஆனால் நாம சங்கீர்த்தனத்தில் இம்ஷைக்கே இடமில்லை. இது ஒரு அஹிம்ஸா யஞ்கம். ஆகவே மிகவும் சிறந்தது.
இதே கருத்தை மகாபாரதமும் கூறுகிறது :
ஜபஸ்து சர்வதர்மேப்ய: பரமோ தர்ம உச்யதே  |
(அஹிம்ஸ யா ச ) பூதானாம் ஜபயஞ்க: ப்ரவர்த்ததே ||
நாம சங்கீர்தனத்தின் பெருமையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். எண்ணற்ற மகான்கள் இக்கருத்தை வலியுறுத்தி கலியுகத்திற்கு சிறந்த உபாயம் நாம சங்கீர்த்தனமே என்று நிலைநாட்டிவிட்டு சென்றுள்ளனர். நாமும் அவர்களை தொடர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்வோம் ;
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “நாம ஸங்கீர்தனத்தின் சிறப்பு

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s