கோவில் அதிசயங்கள்

👉🏽 திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சத்யவாஹுஸ்வரர் ஆலயத்தில் வருடத்தில் 6 நாட்கள் மட்டும் சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது.

👉🏽 சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் அஷ்ட பைரவர் எனும் 8 பைரவர்களுக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் 27 நக்ஷத்திரங்களுக்கும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அஷ்ட பைரவர்களின் சன்னதியானது வெள்ளிக்கிழமை மட்டும் தான் திறப்பார்களாம்

👉🏽 சேலம் மாவட்டம்., அரியனூர் எனும் இடத்தில்., ஒரு சிறிய மலையில்., 1008 சிவலிங்கங்கள் உள்ள ஒரு கோயில் உள்ளது. ஒவ்வொரு லிங்கத்திற்க்கும் ஒரு தனி பெயர் உள்ளது.

👉🏽 தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தலம் பருத்தியப்பர் கோயில். பங்குனி 18., 19., 20 தேதிகளில் உதய வேளையில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன.

👉🏽 ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

👉🏽 திருவண்ணாமலை., சிதம்பரம்., திருவானைக்காவல் (திருச்சி அருகில்)., ஸ்ரீரங்கம்., திருவாரூர்., திருவக்கரை (விழுப்புரம் மாவட்டம்)., காஞ்சிபுரம்., மதுரை., திருநெல்வேலி., குடுமியான்மலை டதலங்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன.

👉🏽 சேலம் காசி விஸ்வநாதர் கோயிலில் முழுதும் 
ருத்ராக்ஷத்தால் ஆன தேர் ஒன்று உள்ளது.

👉🏽 உலகின் முதல் சிவலிங்கம்., திருநெல்வேலி மாவட்டம்., பாபநாசம்., பாபநாசநாதர் கோயிலில் உள்ள சிவலிங்கம்.

👉🏽 குடந்தை நாகேஸ்வரம் திருக்கோயிலிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூர் தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம். இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை., பாணம்., நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம்., சிவராத்திரி., மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது. சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது விழுவதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம் போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சம்/அதிசயம்., சூரிய கிரகணத்தின் போது ஒரு பெரிய ராஜநாகம் எங்கிருந்தோ வந்து ஸ்தலமரமான வில்வ மரத்தில் ஏறி., வில்வத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு., கோமுகத்தின் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை 3 முறை வைத்தபின்., கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின்., வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

👉🏽 திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில், ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரர். ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம், 3ம் தேதியன்று, சூரிய ஒளியானது, கோவிலின் ராஜகோபுரம் மீது பட்டு, பின், நந்தீஸ்வரர் மீது விழுகிறது. அந்த நேரம் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்கிறார்.

👉🏽 இராமநாதபுரம் மாவட்டம்., திருவாடானை அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்., ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால்., “ஆதிரத்தினேஸ்வரர்” எனப் பெயர் வந்தது. இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.

👉🏽 அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில்., பிரான்மலை., சிவகங்கை மாவட்டம். மங்கைபாகர் இத்தலத்தில் போக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு ஒருமுறை அணிவித்த ஆடையை., மறுபடியும் அணிவிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் இவருக்கு புத்தாடையையே அணிவிக்கின்றனர். இத்தலத்தில் தக்ஷிணாயண புண்ணிய காலம் முடியும் கடைசி மூன்று மாதங்களிலும், உத்தராயண புண்ணிய காலம் துவங்கிய முதல் மூன்று மாதங்களும் என தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் (ஐப்பசி முதல் பங்குனி வரையில்)., சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி மரமாகும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும்., காய்க்கும். ஆனால்., பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளியங்காய்., கீழே உதிர்ந்து விடும். இதன் இலைகள் எப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும்.

👉🏽 அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில்., திருவேடகம்., மதுரை மாவட்டம்.
சிவன் கோயில்களில்., சுவாமி சன்னதியில் இரண்டு துவார பாலகர்கள் பாதுகாப்பாக நிற்பர். அம்மன் சன்னதியில் துவார பாலகியர் இருப்பர். ஆனால் இங்குள்ள ஏலவார் குழலியம்மன் சன்னதியில் இரண்டு துவாரபாலகர்கள் காவலுக்கு நிற்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. திருவேடகத்தில் சிவராத்திரியன்று நான்காம் ஜாம கால பூஜையில்., பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. காசியிலும் சிவராத்திரியின் நான்காம் ஜாம கால பூஜை பைரவருக்கு நடத்தப்படும். அதே அடிப்படையில்., இந்தக் கோயிலிலும் காலபைரவருக்கு பூஜை நடப்பது சிறப்பானது. இந்த பூஜையைக் காண்பவர்கள் அஸ்வமேதயாகம் செய்த பலனை அடைவர்.

👉🏽 கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்…..

வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு. பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள். குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக., இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடையாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.

பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்…!!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “கோவில் அதிசயங்கள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s