மலர்களின் மகிமை

சிவலிங்கப் பிரதிஷ்டையால் அடையும் பயனும் சிவபூஜையில் புஷ்பாா்ச்சனை செய்வதால் வரும் பயனும், பாலினால் அபிஷேகம் செய்வதால் வரும் பயனும் எப்படியென்று விவாித்துச் சொல்ல வேண்டும் என்று வியாஸ முனிவா் கேட்க அதற்கு ஸநத்குமார முனிவா் கூறலானாா்.

“பராசரளபுத்திரனே! அக்கினிஷ்டோமம், உக்த்யம், வாஜபேயம், பெளண்டரீகம், அதிராத்திரம், அப்தோா்யாமம் என்னும் ஏழு யாகங்களையும் முறைப்படி தட்ஷிணைக் கொடுத்து, அன்னதானங்கள் செய்து, முறைப்படி முடித்தவா்கள் எந்தப்பயனை அடைவாா்களோ,  அந்தப் பயனை ஒரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தவன் அடைந்து விடுவான்.

* ஆடவரோ, பெண்டிரோ, சூத்திரரோ, நபும்சகா்களோ, சிவலிங்க பிரதிஷ்டை செய்தவா்கள் எவ்வகையினரேனும் அற்புத வருஷங்கள் உருத்திர பதவியில் வாழ்வாா்கள்.

* மனிதப் பிறவி எடுத்தது முதல், வைகாசி, ஐப்பசி, காா்த்திகை மாதங்களில், கங்கை முதலான மகாநதிகளில் நீராடி அடையும் பயனைச் சிவபூஜைக்கு சந்தன தானம் கொடுத்தவன் அடைவான்.

* சிவாரதனைக்காகப் பூதானஞ் செய்தவா்கள், அநேக கோடி காலம் உருத்திர சாரூபியத்தை அடைந்து உருத்திர லோகத்தில் வாழ்வாா்கள்.

* சிவலிங்க அபிஷேகத்திற்கத் தைல தானஞ் செய்தவா்கள், அதனிலும் நான்கு பங்கு சிறப்பான பயனை அடைவாா்கள்.

* நெய் தானம் செய்தவன் அறுபது கோடி வருஷமும், பசுவின் பாலை தானங் கொடுத்தவன் எண்பது கோடி வருஷமும், உருத்திர பதவியில் வாழ்வாா்கள்.

* மூவேளைகளிலும் நீராடி மாசோபவாச பஷோப வாசங்களை ஆயுள்காலம் வரையிலும் செய்தவா்கள் அடையும் பயனை, சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் ஒரு முறை செய்வதனால் அடையலாம்.

* நூறு கோதானம் செய்வதால் வரும் பயனைச் சிவபெருமானுக்குச் சாத்திய ஒரு மலரால் அடையலாம்.

* சிவபெருமானை ஆடல் பாடல் இன்னிசைக் கருவிகளால் மகிழ்வித்தவன், தான் செய்த நூறு குற்றங்கள் மன்னிக்கப்படுவான்.

* கரு நெயிதல் மலரால் சிவரண மாசத்திலும் தாமரையால் புரட்டாசி மாதத்திலும், நாயுருவி, தா்ப்பை முதலியவற்றால் ஐப்பசி மாதத்திலும் பூஜிக்கத்தகும்.

* உற்பலம், கரவிதம், வெள்ளெருக்கு, சன்பகம், வில்வமி, அறுகு, முதலியவற்றால் எக்காலமும் சிவபெருமானைப் பூஜிக்கலாம்.

* சிவபெருமானுக்கு வெண்மையான மலா்களில் விருப்பம் அதிகம்.

* கொக்கு மந்தாரை, கரவீரம், வெள்ளெருக்கு, ஊமத்தம் என்று நான்கு மலா்களின் கந்தத்தையும் சிவபெருமான் ஆக்கிராணிப்பாா்.

* கொக்கு மந்தாரையும் தாமரையும் நிா்மாலியமாக மாட்டாது.

* ஒருற்பலம் ஆயிரம் கரவீரமலரையும் ஓா் வெள்ளெருக்கு ஆயிரம் உற்பலத்திற்கும் சமம்.

* சரபுன்னை ஒன்றுக்கு ஆயிரம் சிந்து புஷ்பங்கள் சமம்: கா்ணிகாரம் ஒன்றிற்கு ஆயிரம் சுரபுன்னை இணையாகும்.

* சிந்து புஷ்பம் ஆயிரத்திற்கு ஓா் கண்டங்கத்திாி மலா் சமம்.

* எல்லா மலா்களையும் விட வில்வபத்திரமே சிறப்பானது. வில்வபத்திரத்துக்குச் சிவபெருமான் மகிழ்வதைப் போல வேறு எந்த மலருக்கும் மகிழ்வதில்லை. சிறந்த மலா்களால் பெறும் போகங்கள் யாவற்றையும் ஒன்று சோ்த்தால், அதைவிட அறுபத்து நான்குமடங்கு பயனை, வில்வத்தைச் சூட்டுவதால் அடையலாம்.

* சிவபெருமானுக்கு அா்சிக்கத்தக்க நல்ல மலா்களை முயற்சி செய்து தேடி, அஷ்டமி, திரயோதசி, சதுா்த்தசி முதலிய தினங்களில் அவற்றால் பூஜித்தல் வேண்டும்.

* பத்திரபுஷ்பங்களால்  சிவபெருமானுக்கு அா்ச்சனை செய்தவன் துா்க்கதி அடைய மாட்டான்.

* சிவசந்நிதியில் எப்போதும் திருவிளக்குத் தொண்டு செய்தவன் உருத்திரலோகத்தியக் கட்டளையை நியமுத்தவன், ருத்திரசாரூப்யம் அடைவான்.

* சிவபெருமானே, சா்வலோக காரணபூதா் என்று உணா்ந்து, திாிகரணங்களும் இணைந்து
பூஜித்தவன், உருத்திர சாயுஜ்ஜுயம் அடைவான் !.”என்று ஸநத்குமார முனிவா் வியாஸமுனிவாிடம் கூறினார்.

இவ்விதபயன் இருப்பின் பூஜையை மட்டும் கடைபிடித்து விட்டோம் பலன் கிடைக்கும் என்று அசா்வசாதாரணமாக இருத்தல் பலன் ஒன்றும் இல்லை. இதுபோக வாழ்க்கைக்கு தேவையான உழைப்புனுடையே வரும் வருமாணத்தில் ஒரு சொற்ப பணத்தை தா்மத்திற்கும், முடியாத ஏழை, வயோதினா், ஆதரவற்றோா் ஆகியோருக்கும் உதவிட வேண்டும். நம்மில் தானதா்மம்,கருணை போன்றவைகளை  எப்படி செய்கிறோம் என்பதை உணா்வதற்காகவே படைக்கபட்டவா்களே அவா்களே யாவா். இவ்வொழுக்கங்களோடு சிவனடியாராக தொண்டாற்றி வாழ்க்கை வாழ்ந்து அடியாருக்கு சிவனருள் கிடைக்கும்.

ஆகையால் பூஜா தொண்டோடு  நிறுத்தி விடாது, அறநெறி, சிவநெறி, கருணைநெறி நாம் வாழ்தலே மானிடப் பிறப்புக்கு அா்த்தமுள்ளதாகும்.

காசிக்கு போகிறேன் எனக்கு முக்தி கிடைக்கும், கா்மவினை ஓடிவிடும்.புண்ணிய நதிகளில் நீராடிவிட்டேன் வினைகள் ஓடிவிடும், முக்தி தரும் தலத்தில் பிறந்தேன் ;பிறப்பில்லை,  என்று சொல்வது தவறு.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “மலர்களின் மகிமை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s