ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்

image

ஒரு வைஷ்ணவர்  பெரியவாளிடம் வந்து உபதேசம்
செய்யுமாறு ப்ரார்த்திது வந்து நின்றார்.

‘உங்களுக்கென்று தனி ஆசாரியார்கள் இருக்கிறார்கள்..
ஜீயர்ஸ்வாமிகள், ஆண்டவன் ஸ்வாமிகள் எந்றெல்லாம்..
அவாளிடம் போய் பரந்யாசம் பண்ணிக்கறதுதான் முறை’
என்று சொன்னார் பெரியவா.

ஆனால் வைஷ்ணவர் மனம் சிறிதும் தளராமல் அங்கேயே
நின்று”எம்பெருமான் ஆக்ஞை …தங்கள் திருவாக்கால்
ஏதாவது சொல்லணும்’.. என மன்றாடினார்.

வியாசாசாரியர் மாதிரி விளங்கிய பெரியவா சொன்னார்கள்..

‘வாஸநான் வாஸுதேவஸ்ய  வாஸிதம் தே ஜகத் த்ரயம் |
ஸர்வபூத நிவாஸோஸி வாஸுதேவ நமோஸ்துதே ||
..இதையே ஜபம் மாதிரி ஸதா சொல்லிண்டிருக்கலாம்’
என்று சொல்லி ப்ரஸாதமாகக் கல்கண்டும், பழமும்
கொடுத்தார்கள்.

வைஷ்ணவருக்கு பாற்கடல் போன்ற சந்தோஷம்!

ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்று சொல்லிட்டா!
என்று அணுக்கத் தொண்டர்களிடம் சொல்லி த்
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இன்னொரு வைஷ்ண்வருக்கு பரமேச்வரனிடத்தில்
அளவற்ற பக்தி. திரு நீறு அணிந்து, ருத்ராக்ஷமும்
கழுத்தில் போட்டுக்கொள்ள ஆவல்!

அவ்வப்போது பெரியவா தரிசனத்துக்கு வருவார்
அவர். ஒருதடவை வந்தபோது பெரியவாளிடம்
ப்ரார்த்தித்துக் கொண்டார்.
பிரதோஷத் தன்னிக்கு நான் பஸ்ம தாரணம்
பண்ணிக்கணும்…,  நிறைய ருத்ராக்ஷ மாலை
போட்டுக்கணும். ஸ்ரீருத்ர சம்கம் சொல்லி
ஈஸ்வரனுக்கு அபிஷேகம் பண்ணணும்…
நனோ ..வைஷ்ணவன்.. நான் இப்படிச் செய்யலாமா
என்று பெரியவாதான் சொல்லணும்…”

அவர் சொல்வதை பொறுமையாகக் கேட்டு
கொண்டிருந்தார் பெரியவா.

பிரதோஷ காலத்திலே உன் வழக்கப்படி பன்னிரண்டு
திருமண் இட்டுக்கோ. அனுஷ்டானம் செய். லக்ஷ்மி
நரசிம விக்ரஹம் அல்லது சாளக்ராமத்துக்கு திருமஞ்சனம்
திருவாராதனம்  பண்ணு, அது போதும் சம்பிராதயங்களை
மாற்றக் கூடாது, விடவும் கூடாது.

”பிரதோஷ காலத்தில் அஹோபிலமடம் ஜீயர் ஸ்வாமிகள்
லக்ஷ்மி நரசிமஸ்வாமிக்கு திருவாராதனம் செய்வது
வழக்கம், உனக்குத் தெரியுமோ?”..
‘தன்யனானேன்’… என்றார் வந்த வைஷ்ணவர்.

சம்பிரதாயத்துக்கு விரோதமாக எந்தசடங்கினையும்
செய்யச் சொன்னதில்லை பெரியவா. மாறாக
மரபுகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது
நம் கடமை என்பதையே வலியுறித்தினார்கள்.

தகவல் கோதண்டராம சர்மாவின் அனுபவ தரிசனங்கள்.

ஜய ஜய சங்கரா….

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s