வேத ஸப்தங்களை ரெக்கார்ட் பண்ணக்கூடாது!

image

ஸ்ரீ மகரபூஷணம் ஐயங்கார் பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர். ஸாமவேதத்தில் ஜைமினீய ஶாகையை நன்றாக அத்யயனம் பண்ணியவர். ஸிஷ்டாச்சாரர். பெரியவாளுக்கும் அவரிடம் மிகுந்த அனுக்ரஹம்.

ஸ்ரீ மகரபூஷணம் ஐயங்காருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து அழைப்பு! எதற்கு? ஜைமினீய சாகையை டேப்பில் ஒலிப்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக!

தன் வாழ்வில், ஸதா அரணாகக் கொண்ட பெரியவாளிடம் வந்தார்.

“திருப்பதி தேவஸ்தானத்லேர்ந்து கூப்டறா…ஜைமினீய ஶாகையை ரெக்கார்ட் பண்ணிக்கணுமாம்… நா…என்ன பண்ணட்டும்னு, பெரியவா உத்தரவாகணும்”

“ஒன்னோட அபிப்ராயம் என்னன்னு சொல்லு…”

பெரியவா அநேஹமாக தன்னுடைய அபிப்ராயத்தை, ‘இதுதான்!’ என்று சொல்ல மாட்டார். கேட்பவருடைய அபிப்ராயத்தைக் கேட்டு, அதை அனுஸரித்தே நல்லது கெட்டதை சொல்லுவார். Choice நம்முடையது! அவருக்கு ஸம்மதமாக நடந்தால், நம்முடைய அத்தனை பாரத்தையும் அவரே தாங்குவதை நம்மால் ஆனந்தமாக அனுபவித்து, எது நடந்தாலும், அலட்டிக் கொள்ளாமல், நிம்மதியாக இருக்க முடியும்.

இல்லாவிட்டாலும், அவர்தான் எல்லாருடைய பாரத்தையும் தாங்குகிறார் என்றாலும், அதை அறிந்து கொள்ள முடியாமல், நாமே கஷ்டப்படுவதாக எண்ணியெண்ணி கஷ்டப்படுவோம்.

“வேதத்தை டேப் பண்றதுல எனக்கு ஸம்மதமில்ல! ஆனா, திருப்பதி தேவஸ்தானத்லேர்ந்து கூப்ட்டதுனால, பெரியவாகிட்ட தெரியப்படுத்தினேன்”

“வாஸ்தவந்தான். வேத ஶப்தங்களை ரெக்கார்ட் பண்ணக் கூடாது. அதுனால ப்ரயோஜனமும் இல்ல. அதோட அப்டி ரெக்கார்ட் பண்றதுனால ஏகப்பட்ட கெட்டதுகள் நடக்கும்….”

என்ன தீமைகள் என்பதை மகரபூஷணம் ஐயங்காரிடம் மட்டும் தெரிவித்தார். ஏனென்றால், அவர் பெரியவா என்ன சொன்னாலும் கேட்கக் கூடியவர். அவருக்கு பெரியவா வாக்கு, பெருமாள் வாக்கு ! [இன்றைக்கு நடக்கும் பல தீமைகளுக்கு, வேத ஶப்தங்களும், காயத்ரி மந்த்ரமும் ரெக்கார்ட் பண்ணப்பட்டு, கண்டபடி, கண்ட இடத்தில் இரைபடுவதே காரணம்]

“பெரியவா உத்தரவுப்படியே பண்றேன்….என்னோட பாராயணத்தை அரங்கன் மட்டும் கேட்டு ஸந்தோஷப்பட்டாலே போறும். அப்போ, திருப்பதி தேவஸ்தானத்துக்கு, என்னால முடியாதுங்கறதை சொல்லிடறேன்…”

நிம்மதியோடு நமஸ்கரித்து விட்டு சென்றார்.

மற்றொரு முறை அவருக்கு அமெரிக்காவிலிருந்தும் அழைப்பு வந்தது! அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அமெரிக்கா போனால், திரும்ப வரும்போது, சில லக்ஷங்களோடு [இந்தக் காலத்தில் கோடி] திரும்ப வரலாம்; அதே ஸமயம் பல ‘விகாரங்களு’டனும் வரலாம்!..”

மறுபடி பெரியவாளிடம் சென்று இதைப் பற்றி சொல்லிவிட்டு, பெரியவாளின் உத்தரவைக் கேட்காமல், அவரே….

“நா…… போறதுக்கில்லே…பெரியவா” 

தண்டன் ஸமர்ப்பித்தார்.

“ரொம்ப ஸெரி ……..பணம் கொஞ்ச காலம் காப்பாத்தும்; பகவான் எப்பவுமே காப்பாத்துவான்!…”

அழகாக சிரித்தபடி, அயபகரம் தூக்கி ஆஸிர்வதித்தார். தனக்கு ஸம்மதமான வேதவித்தைப் பார்த்து பகவான் ஸந்தோஷமடைந்தான்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s