ராசிகளும் க்ஷேத்திரங்களும்

image

மேஷம்
சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திர நாட்களில் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். ஏழை மாணவர்களது கல்விக் கட்டணத்தைச் செலுத்துங்கள். வருமானம் உயரும்.
ரிஷபம்
திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க நாதரை மனமுருக வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்; சுபிட்சம் ஏற்படும்.
மிதுனம்
பூரம் நட்சத்திர நாளில், உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள பரிக்கலுக்குச் சென்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.
கடகம்
திங்கள் அல்லது பூரம் நட்சத்திர திருநாளில் காஞ்சிபுரம் சென்று, ஸ்ரீகாமாட்சி அம்மனை வழிபடுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்; மகிழ்ச்சி பொங்கும்.
சிம்மம்
சுவாதி நட்சத்திர திருநாளில் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரிக்கு சென்று, ஸ்ரீராகவேந்திரரை வணங்கி வாருங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவுங்கள்; நிம்மதி கிடைக்கும்.
கன்னி
சதயம் நட்சத்திர திருநாளில், திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் அருளும் ஸ்ரீவக்ரகாளியம்மனை வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்; நிம்மதி கிட்டும்.
துலாம்
ரேவதி நட்சத்திர திருநாளில் விருத்தாசலம் சென்று, ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆழத்து விநாயகரை அருகம்புல் சார்த்தி வழிபட்டு வாருங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.
விருச்சிகம்
அசுவினி நட்சத்திர நாளில் மருத மலைக்கு சென்று, அங்கே பாம்பாட்டி சித்தருடன் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். விதவைப் பெண்ணுக்கு உதவுங்கள்; எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.
தனுசு
ஞாயிற்றுக் கிழமை அல்லது உத்திர நட்சத்திரம் நடைபெறும் நாட்களில், கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனம் சென்று, அருள்மிகு சரபேஸ்வரரை வழிபடுங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள். மனதில் அமைதி நிலைக்கும்.
மகரம்
விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூவராகவப் பெருமாளை உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றவர் களுக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.
கும்பம்
திருச்சி- சமயபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமாரியம்மனை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று விளக்கேற்றி வணங்குங்கள். திருந்தி வாழும் கைதிகளுக்கு உதவுங்கள். செல்வம் பெருகும்.
மீனம் திருவண்ணாமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் கிரிவலம் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s