அன்னலக்ஷ்மி – மஹாபெரியவா

image

பெரியவா  சரணம்

பெரியவாளிடம்    கைங்கர்யம்    செய்த   தியாகராஜன்   அவர்களின்     அனுபவம்.

பெரியவாவை   தரிசனம்    செய்ய   வரும்   பக்தர்கள்      மகானிடம்     பிரசாதம்    பெற்று,  போஜனமும்   செய்து  விட்டுச்     செல்வது     வழக்கம்.

ஒருநாள்     எதிர்பார்ப்புக்கு      அதிகமாக    வந்துவிட்டனர்.     பந்தி பந்தியாக    பக்தர்கள்      சாப்பிட,  அன்னம்      குறைந்து   விட்டது.    எல்லோர்க்கும்     அன்னம்    போதாது    என்ற    நிலை,   அங்கே    ஏற்பட்டு விட்டது.

உள்ளே    அறையில்    அரிசி மூட்டையும்   இல்லை.    இனிமேல்     கடையில்    இருந்து   அரிசி   மூட்டையை   வாங்கி வந்து    சமைப்பது  இயலாத    காரியம்.     பக்தர்களை    ‘சாப்பாடு   தீர்ந்து   விட்டது, போய் வாருங்கள்’    என்று    சொல்லவும்   முடியாது.

என்ன   செய்வது    என்று   தடுமாறிக்  கொண்டிருக்கையில்,     எதிர்பாராவிதமாக    கருணாமூர்த்தியான     பெரியவா    போஜனம்    நடக்கும்   பந்தி   வழியாக    நடந்து   வந்தார்.

சமையலறைப்   பக்கம்    அம் மகான்  வந்த  போது,    தனது   அளவிலா    அருட்கடாட்சத்தால்    ஆட் கொண்டவராய்   ஓர்    அருட்பார்வை   வீசினார்.

“அன்னலட்சுமியை    வணங்கி   விட்டு    சாதம்   பரிமாறுங்கள்”   என்று   உத்திரவிட்டார்     அந்தக்     கருணை மூர்த்தி.    இவர்கள்     அப்படியே    செய்ய,     சாதம்    கொண்டு  செல்லப்பட்டது.அன்னம்    அள்ள  அள்ள    குறையாமல்     அதே    அளவிலேயே     இருந்தது.

அதாவது     அன்னம்   அட்சயப்  பாத்திரமாகவே   மாறியிருந்த      அற்புதத்தைக்    கண்ட    அனைவரும்   வியந்தனர்.   

உலகிற்கே   படியளக்கும்    தயாநிதியாக   இருக்கும்   மஹா   பெரியவாளின்    அருளால்    இது    சாத்தியமே.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “அன்னலக்ஷ்மி – மஹாபெரியவா

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s