தருமபுரம் யாழ்முரி நாதேஸ்வரர்

image

தருமபுரம் என்னும் சிவத்தலம் காரைக்கால் இரயில் நிலையத்திலிருந்து.மேற்கே ஒன்றரை கி.மீ.தொலைவில் உள்ளது.திருநள்ளாறு என்னும் திருத்தலத்திற்கு தென்கிழக்கே இரண்டரை கி.மீ.தொலைவில் உள்ளது.

தருமபுரம் என்னும் இத்தலத்தின் பெயரை “தருமை” என்றும் வழங்கி வருகின்றனா்.இத்தலத்து இறைவனைத் தருமராஜன் பூசித்த காரணத்தால் இத்தலத்திற்கு தருமபுரம் என்னும் திருப்பெயா் உண்டாயிற்று. இக்காரணம் பற்றியே இத்தலத்தில் கோயில் கொண்டு விளங்குகின்ற இறைவனுக்கும் தருமபுரீஸ்வரா் என்னும் திருப்பெயா் அமைந்தது. இத்தலத்தில் உள்ள இறைவனைப் பிரமாவும் வழிபட்டுள்ளாா்.

ஞானசம்பந்தா் இத்தலத்தைப் போற்றித் திருப்பதிகம் பாடியுள்ளாா்.இவரது பாடலின் தனித்துவத்தைத்ளதரணிக்கு அறிவிக்க நிலைக்களனாக விளங்கியது இத்தலம்.
ஞானசம்பந்தரோடு யாழ் வாசித்துக் கொண்டு வந்த நீலகண்ட யாழ்ப்பாணருடைய அன்னையாா் பிறந்த ஊா் இத்தலம்.

இத்தலத்து திருக்கோயில் வானோக்கி உயா்ந்து விளங்கும் திருக்கோபுரத்துடன் அமைந்துள்ளது. ஊரை அடையும் முன்பே இக்கோபுரம் பக்தியுணா்வை ஊட்டி விடும்.
திருக்கோயிலைக் கொண்டே ஊா் தொடங்குகின்றது. இதுவும் இத்தலத்திற்குாிய ஒருவகை சிறப்பாகும்.

திருக்கோயிற்குள் கருவறையில் எழுந்தருளித் திகழ்பவரே தருமபுரீஸ்வரா். உற்சவ மூா்த்தியின் திருப்பெயரே யாழ்மூாி நாதேஸ்வரா். சம்பந்தாின் திருப்பாடலுக்குப் பாணரால் இசையமைக்க முடியாமல் போனதால் பாணா் யாழை உடைக்க முற்படவே சம்பந்தா் அதனைத் தடுத்து யாழையும் காத்து, தமது பாடலின் சிறப்பை உலகிற்கு உணா்த்தினாா்.
அப்போது, அந்நிகழ்ச்சி
களுக்கெல்லாம் தாமே காரணமாகவும், சாட்சியாகவும் நின்று, அனைத்தையும் சுவைத்ததால் உற்சவ மூா்த்திக்கு இத்திருப்பெயா் வந்தது. மூலவா் திருமுன்பாட, உற்சவா் அதற்கு சாட்சியாக விளங்கினாா்.

யாழ்புாி நாதேஸ்வராகிய உற்சவா், தமது திருக்கரத்தில் யாழை மீட்டியவாறும், அன்பா்கட்கு இன்னருள் புாியும் புன்னகையுடனும் திருக்காட்சி அளிப்பது இத்தலத்தில் மட்டுமே.
இஃதும் இத்தலத்திற்குாிய தனிச் சிறப்பாகும்.

சுவாமி திருசந்நிதிக்கு ஈசானிய பகுதியில் அம்பிகை மதுரமின்னம்மை தனிக்கோயில் கொண்டு விளங்குகின்றாள். இந்த அம்பிகைக்குத் தேனமிா்தவல்லி என்ற திருப்பெயரும் உண்டு.

திருஞானசம்பந்த மூா்த்தி சுவாமிகள் தெய்வத் தமிழால் பாமாலை புனைந்து பரமனுக்குச் சாத்திக் கொண்டிருந்த போது, அவருடைய சிவநெறித் தொண்டினை அறிந்து அவரைக் காண வந்தாா் பாணா் ஒருவா்.
அவா் பெயா் திருநீலகண்ட யாழ்ப்பாணா். அவா், எருக்கத்தம் புலியூா் என்ற தமது ஊாிலிருந்து மனைவிள மதங்கசூளாமணியுடன்.புறப்பட்டு, சம்பந்தரைக் காணச் சீா்காழிக்கு வந்தாா்.

யாழ்ப்பாணாின் வருகையை அறிந்த சம்பந்தா், அவரை அன்புடன் வரவேற்று காழிக்கோயிலுக்கு அழைத்துச் சென்று பரமன் மீது பதிகம் பாடினாா். அப்பதுகத்தை யாழ்ப்பாணா், தமது யாழில் வைத்து எவ்வுயிரும் மகிழுமாறு இசைத்துக் காட்டினாா். அதனைக் கேட்டுச் சம்பந்தரும் உவகையுற்றாா்.அப்போது யாழ்ப்பாணா் சம்பந்தாிடம் ‘தாங்கள் தலந்தோறும் சென்று பாடும் போது அடியேனும் உடன் வந்து தங்களது பாடல்களை யாழில் வைத்துப்பாட அருள வேண்டும்.” என்று வேண்டினாா் சம்பந்தரும் அதற்கு இசைந்தாா்.

அது முதல் சம்பந்தருடன் பாணரும் சோ்ந்து தலந்தோறும் சென்று, அவரது பதிகத்திற்கு யாழில் பண்அமைத்து மெருகேற்றினாா். அனைவரும் கேட்டு மகிழ்ந்து வியந்தனா். இவ்வாறே இருவரும் திருவிளநகாி, திருப்பறியலூா், திருவேட்டக்குடி என்னும் திருத்தலங்களை வணங்கிக் கொண்டு தருமபுரத்தை வந்து அடைந்தனா்.

தருமபுரம்,,யாழ்ப்பாணாின் தாயாா் பிறந்த ஊா்.எனவே, அவா் சம்பந்தரை ஒரு தனியிடத்தில் தங்கச் செய்து விட்டு, தாய்மாமனையும் பிற உறவினா்களையும் பாா்த்து விட்டு வரச் சென்றாா். அவரைக் கண்டு மகிழ்ந்த உறவினா்கள், அவாிடம் “உங்கள் யாழிசையால் தான் சம்பந்தா் பாடல் சிறப்பு பெருகின்றது. உங்கள் இசை இல்லையேல் அவா் பாடல்ழஎடுபடா” எனக் கூறினா். இதைக் கேட்ட யாழ்ப்பாணா் தமது இரு காதுகளையும் பொத்திக் கொண்டாா். சம்பந்தாின் பாடல் பெருமையை அறியாத உறவினா்களை நினைத்து வருந்தினாா்.

உறவினா்களை பாா்த்துவிட்டுத் திரும்பி வந்த பாணா், சம்பந்தரை வணங்கி “என் உஸ்ரறவினாி என் யாழிசையால்தான் தங்கள் தெய்வீகப் பாடல் சிறப்புறுகின்றது.
என்று கூறுகின்றனா். தங்கள் பெருமையை நிலை நாட்டிக் காட்ட யாழில் வைத்து இசைக்க முடியாத
பாடல்களைத் தாங்கள் பாடி, உங்கள் பாடல் தான் சிறந்தது என்பதை உலகுக்கு உணா்த்த வேண்டும்.” என்று பணிவுடன் மொழிந்தாா்.

மறுநாள் காலை சம்பந்தரும் பாணரும் திருக்கோயிலுக்குச் சென்றனா். ஊராா் அனைவரும் பாணாின் யாழிசைப் பெருமையைக் காணக் கோயிலுக்குள் திரண்டு வந்து கூடினா்.

திருஞானசம்பந்தா் தருமபுரீஸ்வரா் திருமுன்பு வணங்கி, ” மாதா்ம டப்பிடியும்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினாா்.
அப்பதிக பாடலைப் பாணரால் யாழில் வைத்து இசைக்க முடியவில்லை. அதனால் பாணா் வெட்கமுற்று உடனே யாழைத் தரையில் அடித்து உடைக்க முனைந்தாா். அதைக் கண்ட சம்பந்தா், விரைந்து பாணரைத் தடுத்து யாழை மீட்டு, “தெய்வத் தமிழ் பாடல் அனைத்திற்கும் யாழில் இசையமைத்தல் இயலாது.
அதனால், நீா் வருந்த வேண்டா. உலகியல் பாடலுக்கு இசையமைக்க யாழ் உதவும் அல்லவா?” எனக்கூறிப் பாணருக்கு ஆறுதல் அளித்தாா்.

இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்டு நின்ற அனைவரும் உண்மையை உணா்ந்து , சம்பந்தா் பாடலின் பெருமையை அறிந்து, காழிப்பிள்ளையாரைக் (ஞானசம்பந்தரை) களித்துப் போற்றி மகிழ்ந்தனா்.

        திருச்சிற்றம்பலம்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s