கை குலுக்கும் பழக்கம்

image

கை குலுக்கும் பழக்கம் யாரிடமிருந்து வந்தது?
கை குலுக்கும் பழக்கம் மேல் நாட்டுக்காரர்களிடம் இருந்து, உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் யாரிடமிருந்து வந்தது?
இந்தப் பழக்கம் நம் பாரத மண்ணில் தோன்றி மற்ற மனித இனத்தைத் தொற்றியது என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு தெரியுமா? ஒரு பெண்ணை ஆணுக்கு திருமணம் புரிந்து வைக்கும்போது, அந்த திருமண சடங்கில் “பாணிக்ரஹணம்’ என்ற ஓர் அங்கம் உண்டு. மணமகளின் கையை மணமகன் கையோடு சேர்த்து வைப்பர். ஒருவருக்கு ஒருவர் சமம்; இருவரின் உயிரும் கலந்தாகி விட்டது என்பதை உணர்த்தவே இந்த சடங்கு.
அதுபோல, இராமாயண காலத்தில் ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி “க்ருஹயதாம் பாணினா பாணிம்” என்றான். “கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது” என்று பொருள். ஸ்ரீராமர் மானுட அவதாரம் தரித்து வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. எனவே, சுக்ரீவன் வானரம் என்றும் வேறுபாடு கருதாமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு முதன்முதலில் கைப்பிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “கை குலுக்கும் பழக்கம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s