குழந்தையை மிரட்டிய பெரியவா

image

ஸ்ரீமடத்தில் பெரியவா தர்ஶனத்துக்கு எப்போதும் போல நல்ல கூட்டம்.

அங்கு வந்திருந்த ஒரு குட்டிப்பையன் என்ன காரணமோ, அழுது கொண்டேயிருந்தான்! அம்மாக்காரி என்னென்னவோ ஸமாதானம் செய்தாலும், எந்த பாச்சாவும் பலிக்கவில்லை. அழுகையும், கத்தலும் ஜாஸ்தியாகத்தான் ஆனதே ஒழிய, குறையவில்லை.

மற்றவர்களுக்கு இது மிகவும் தொந்தரவாகவும் இருந்தது. பெரியவா இருந்ததால், அவர் முன்னாடி அம்மாவையும், குழந்தையையும் மிரட்டவும் முடியாது.

குழந்தைகள் அழுவார்கள், அடம் பண்ணுவார்கள் என்று பலபேர் ஸத்ஸங்கத்துக்கு அவர்களை கூட்டிக் கொண்டு வரமாட்டார்கள். ஆனால், அழுதாலும் பரவாயில்லை என்று ரெண்டு வயஸில் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு, அதுவும் யாரோ முன்பின் தெரியாதவர்களிடம் விட்டுவிட்டு வரும் போது, ஏன் ஸத்ஸங்கத்துக்கு அழைத்துக் கொண்டு வரக்கூடாது? அப்போதுதான் குழந்தைகளுக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் வரும். சிறு வயஸில், பிஞ்சு மனஸில் ஸத்விதை ஆழமாக இறங்கி, அவர்கள் ஆயுஸ் பூரா வழி காட்டும், மரமாகி நிழல் தரும்.

இந்தக் குட்டிப் பையனும் ‘தையத்தக்கா’ என்று கையைக் காலை உதைத்துக் கொண்டு கொஞ்சம் சத்தமாக அழ ஆரம்பித்ததும், பெரியவா பக்கத்தில் இருந்த பாரிஷதரிடம்….

“டேய்! கண்ணா……அந்த ‘லங்கடா’வை கொண்டு வாடா….சொல்றேன்!..”

என்று கொஞ்சம் உரத்த குரலில் கோபமாக அந்தப் பையனையே முறைத்துப் பார்த்துக் கொண்டு சொன்னதும்……

அடுத்த க்ஷணம்……பையன் நடுநடுங்கிப் போனான்!

“லங்கடாவா? உம்மாச்சித் தாத்தா ஏதோ, குச்சியையோ, பிரம்பையோ எடுத்துண்டு வரச் சொல்லி, ஓங்கி ரெண்டு போடப் போறாளோ?…எதுக்குடா வம்பு? அழாம வாயை முடிப்போம்”

என்று நினைத்து பயந்து போய், ‘கப்’பென்று அழுகையை நிறுத்தி விட்டு, அம்மா பின்னால் ஒளிந்து கொண்டு, லேஸாக பெரியவாளை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்ணன் என்ற பாரிஷதர் ரெண்டு நாள் முன்புதான் காஸியிலிருந்து வந்தார். உள்ளே போய் ‘லங்கடா’ வோடு வந்தார்!

பையனுக்கு கண்கள் ஆசையில் விரிந்தன!

கண்ணன் பெரியவாளிடம் கொண்டு வந்து குடுத்தது, குண்டு மாம்பழம்! ‘லங்கடா’ என்ற வகையை சேர்ந்தது! உத்தர ப்ரதேஸத்தில் மட்டும் கிடைக்கும் என்பதால், பெரியவாளுக்காக வாங்கிக் கொண்டு வந்தார்.

“இங்க வா!…”

பயமும், ஆசையும் ஒரு சேர பெரியவாளைப் பார்த்துக் கொண்டிருந்த பையனைக் கூப்பிட்டார். நல்லவேளை! பிரம்பு எதுவும் இல்லை, மாம்பழம்தான்! என்ற ஆசையில் மெல்ல பெரியவாளிடம் வந்து நின்றான்.

“லங்கடாவை அவன்ட்ட குடு”

பாரிஷதர் குழந்தையிடம் ‘லங்கடா’ மாம்பழத்தைக் குடுத்ததும், பெரியவா முகத்திலும், குழந்தை முகத்திலும் ஏக காலத்தில் சிரிப்பு மலர்ந்தது!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s