ஸந்த்யாவந்தனம்

ஜாதி நாமாக உண்டாக்கியதல்ல. பகவத் கீதையில் (4.13) பகவான், “நான்கு வர்ணத்தையும் நானே உண்டாக்கினேன்” என்று சொல்கிறார். ஜாதி நாம் உண்டாகியது என்று சொன்னால் பகவானின் வாக்கிற்கு கௌரவம் இல்லாமல் போகும். நான்கு வர்ணத்தவரும் பகவானின் பொருட்டு, யஜ்ஞத்தின் பொருட்டு சமம்தான்.
வேதத்தைக் கற்று அதன்படி யஜ்ஞ கர்மாவை நடத்தி வைக்கவேண்டிய பொறுப்பு பிராமணர்களுடையது. உலகத்தை ரட்சித்து அந்தந்த கர்மாவை நடத்தி வைக்கவேண்டியது க்ஷத்ரியர்களின் பொறுப்பு. யஜ்ஞத்திற்கு வேண்டியவற்றையெல்லாம் சேர்த்துக் கொடுப்பது வைஷ்யர்களின் பொறுப்பு. இவற்றையெல்லாம் உண்டாக்கித் தருவது உயர்ந்ததான நான்காம் வர்ணத்தாரின் பொறுப்பு.
மந்திரத்தை ப்ராமணாரால் சொல்ல முடியலாம். ஆனால் அக்னியிலே ஹவிசை சேர்க்க அன்னம் வேண்டுமே! அதை உண்டாக்கி தருவது முக்கியம் அல்லவா!
‘மித்ர : க்ருஷ்டி ரநிமிஷாபி சஷ்டே சத்தியாய ஹவ்யம் க்ருதவத்விதமே ‘ என்று ப்ராத சந்தியா வந்தனத்தில் உபஸ்தானம் அனுசந்திக்கும் பொது சொல்கிறோம். ” ஏ மித்ரா ! சூர்யனே! இந்த உலகத்தில் உள்ளவர்களுக்காக விவசாயி பாடுபடுகிறார். இந்த விவசாயிகளின் குடும்பத்தை நீ ரட்சிக்க வேண்டும்! அவர் பலமுடனும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்” என்று இதில் பிரார்த்தனை செய்கிறோம். பிராமணர் சந்தியாவந்தனமே பண்ணவில்லையென்றால் இந்த ப்ரார்த்தனியே இல்லாமல் போய்விடும். அப்போது எல்லா வர்ணத்தாருக்கும் கெடுதல் ஏற்படும்.

இதன்படி பார்த்தால் பிராமணர்களின் உயர்ந்த பண்பு தெரிகிறது. நான்காம் வர்ணத்தரின் உதவியும் அவசியம் என்று பிராமணன் தெரிந்துதான் சூரியனை நமஸ்கரித்து விவசாயியின் நலனையும் அவனது குடும்பத்தாரின் நலனையும் வேண்டி பிரார்த்திக்கிறான்

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார் அவர்களது கோதையின் பாதையிலிருந்து)

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s