வில்வ மாலை

image

நாம் செய்ய வேண்டிய கார்யம்…..

பெரியவாளிடம் பக்தியோ பக்தி என்று பரம பித்தாக இருந்தவர் ப்ரதோஷம் மாமா. அவருடைய கோபமும் அஸாத்யமானது! தனக்கென்று ஏதும் நடக்கவில்லை என்று கோபம் வராது. பெரியவா கைங்கர்யத்தில் ஏதாவது சின்னதா தப்பு வந்துவிட்டால் போச்சு! ஸம்பந்தப்பட்ட பாரிஷதரை, பக்தரை வறுத்து வாயில் போட்டுக் கொண்டு விடுவார்! இது எல்லாருக்கும் தெரியும். முக்யமாக பெரியவாளுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்.

பெரியவாளும் சளைத்தவரா என்ன? மாமாவின்… கோபத்தை ஶாந்தப்படுத்த பலவித யுக்திகளை கையாண்டு ஜெயித்தும் விடுவார்! இது பக்தருக்கும் பகவானுக்கும் ரொம்ப ஸஹஜமாக நடக்கும் வாடிக்கையான விஷயம்.

ப்ரதோஷம் மாமா ரொம்ப நாளாக பெரியவாளை தர்ஶனம் பண்ண வரவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை. ஒருநாள் அவர் வீட்டுக்கு பெரியவாளின் பக்தரான கடம் வித்வான் விநாயக்ராம் வந்தார். மாமா அவரிடம் தன் மனக்குறையை சொன்னார்……….

“இப்பல்லாம் எனக்கு எல்லார்கிட்டயும் ரொம்ப கோவம் வருது. ரொம்ப கோச்சுக்கறேன்! முன்னெல்லாம் என் கோவத்துக்கு பயந்துண்டு அவாளும் ஒழுங்கா இருந்தா…..ஆனா, இந்த கோவம் இப்போ ரொம்ப ஸாதாரணமா போய்டுத்தா……அதுனால யாரும் என் கோவத்தை பொருட்படுத்தறதே இல்ல! இதே.. இவனுக்கு வழக்கமா போய்டுத்துன்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டா போலருக்கு!…..

……பெரியவாட்ட கோச்சுண்டா……அவர் யாரையாவது அனுப்ச்சு, என்னை ஸமாதானப்படுத்திடறா! அவருக்கும் என் கோவம் ரொம்ப பழகிப் போய்டுத்து!………. பாரேன்!…….கிட்டத்தட்ட மூணு மாஸமா நான் பெரியவாளைப் பாக்கவே இல்ல! இந்த கோவத்தை எப்டியாவது கொறைக்கணும்…ன்னு நானும் படாதபாடு பட்டுண்டு இருக்கேன்.” ……..

அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே, சைக்கிளில் வேகமாக வந்த ஒருத்தர், தன் கையில் இருந்த வில்வமாலையை ‘சட்டென்று’ மாமாவின் கழுத்தில் போட்டுவிட்டு புறப்பட்டார்.

“இருங்கோ! நீங்க யாரு?…ஏது இந்த வில்வமாலை?……. எனக்கெதுக்கு போட்டேள்?”

“அரைமணி நேரத்துக்கு முன்னால நான் பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனேன்…..அப்போ, பெரியவா தன் கழுத்துல இருந்த இந்த வில்வ மாலையைக் கழட்டி எங்கிட்ட குடுத்து, “இத இப்போவே கொண்டுபோய் ப்ரதோஷம் வெங்கட்ராமன் கழுத்துல போட்டுட்டு வா!..”ன்னு சொன்னா. அதான் வந்தேன்”

சற்றுமுன் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாமாவின் கவலை போன இடம் தெரியவில்லை!

எல்லார் உள்ளும் பகவான் வஸிக்கிறான் என்பது ஸத்யம். பகவான் தான் உள்ளே வஸிப்பதை புரிய வைக்க… என்று தனியாக எதுவும் பண்ணுவதில்லை. ஏகாக்ர பக்தியால், பக்தர்கள் அவனை உணருகிறார்கள். இது எல்லோருக்குமே ஸாத்யமான ஒன்றுதான்! ஸுலபமானதுதான் என்றாலும், மிக கடினமானது போலிருக்கும்.

நாம் செய்ய வேண்டிய ஒரே கார்யம்……..அப்யாஸம்! இக்ஷ்க்ஷணமே ஆரம்பிப்போமே!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s