மனிதப் பிறவி

சிவமயம்  சிவாயநம

பிறப்பும் இறப்பும் மனித வாழ்க்கையோடு இணைந்தது
பிறப்பு ஒன்று இருந்தால் அதனுடன் இறப்பு ஒன்றும் இருக்கிறது

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள்

மனிதன் பிறவி எடுக்கிறான்

அவனுக்கு உயிரும் கொடுக்கிறான்

இந்த உயிர் என்பது ஆத்மாவை குறிப்பிடுகிறது

மனிதன், உடலில் ஆத்மா இருக்கும் வரை உயிரோடு இருக்கிறான்

எப்போது ஆத்மா மனிதனின் உடலை விட்டு பிரிகிறதோ அப்போது மரணம் அடைகிறான்

மரணத்தால் இந்த உடல் அழிகிறது
ஆனால் ஆத்மா அழிவதில்லை

மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று சொல்லலாம்

மரணம் என்ற அட்டவணையுடன் மனிதன் ஜனனம் எடுக்கிறான்

ஒரு மனிதன் மரணம் அடைகிறான் என்றால் அவன் மறுஜனனம் எடுக்கிறான் என்ற பொருளடக்கம் கொண்டது

பிறப்பும் இறப்பும் இரண்டு சக்கரங்களாக வாழக்கையை சுழல வைக்கிறது

ஜனனம் தான் மரணம் மரணம் தான் ஜனனம் இது தான் உண்மையான ஆன்மீக தத்துவம்

இந்த இரண்டு நிழிக்வுகள் இடையே மனிதன் எத்தனை மாறுபட்ட காலங்களை சந்திக்கிறான்

அதிலிருந்து பல அனுபவங்களை கற்றுக் கொள்கிறான்

காலங்கள் ஓட ஓட மனிதனின் வயதும் ஏறுகிறது

பால்யம் , இளமை , முதுமை என்று மூன்று விதமாக மனிதனின் வாழக்கை வகுக்கப்படுகிறது

மனிதன் எப்படி பழயவைகளை மாற்றி புதுபிக்கிரானோ அதுபோல முதுமை எய்த மனித உடலில் இருந்து ஆத்மா பிரிந்து வேறு ஒரு உடலில் குடி கொள்கிறது

மனிதனுடைய வாழக்கை சக்கரம் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது

தொடக்கப்பட்ட ஒரு செயல் முடிவடைந்து அதன் முடிவே மற்றொரு செயலின் தொடக்கமாக இருப்பதை போல பிறப்போடு தொடங்கிய மனித வாழக்கை மரணத்தில் முடிவடைந்து அதுவே இன்னொரு பிறவியின் தொடக்கமாக அமைகிறது

ஆதியும் அந்தமும் முடிவற்றது போல மனித வாழ்க்கையோடு பிறப்பும் இறப்பும் இயங்கிக் கொண்டே இருக்கிறது

மரணத்தால் மனித உடல் மட்டும் அழிகிறது

அவனுள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் ஆத்மா அழிவதில்லை மனிதன் இந்த தத்துவத்தை அறியாமல் மரணத்தை கண்டு பயப்படுகிறான்

முதுமை அடைந்த மனிதன் ஒவ்வொரு நாளும் மரண பயத்தோடு வாழ்க்கையோடு வாழ்கிறான்

ஆத்மா என்றும் அழியாதது  இதற்க்கு மரணமே கிடையாது  ஆத்மா ஒரு இடத்தில் நிலையில்லாதது

இந்த தத்துவத்தை புரிந்து கொண்ட மனிதன் வாழக்கையில் மரணத்தை ஒரு மாயையாக நினைக்கிறான்

எப்படி முழு நிலவை பாஉர்நாமி என்றும்  தேயும் நிலவை அமாவாசை என்றும் சொல்லுகிறோமோ அதுபோல உடல் இயங்கும்போது உயிரோடு இருப்பதாகவும் உடல் அழியும்பொது உயிரற்ற சவமன்றும் மனித வாழக்கையை ஒரு நிலவோடு ஒப்பிடலாம்

இந்த ஜீவாத்மா என்றும் அழியாதது  மரணம் என்பது ஒரு வாழ்க்கையின் முடிவு இந்த முடிவே இன்னொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று சொல்லலாம்

மனிதபிறவி என்பது அற்புதமானது

முற்பிறவியில் செய்த நல்ல கர்மத்தால் இந்த பிறவியில் மனிதனாக பிறக்கிறோம் என்று புராணங்கள் சொல்லுகின்றன

மனிதனாக பிறப்பதற்கு அறிய மாதவம் செய்திட வேண்டும்

அதிலும் எடுத்த பிறவியிலே ஆரோக்கியமான பிறவி எடுப்பது நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம்

இந்த பிறவியின் பயனை நன்றாக அறிந்து உடல் , மனம் ,மூளை மூன்றையும் இணைத்து செயல்படுத்தி வாழக்கை பயணத்தை சலனமின்றி தெளிவான பாதையில் வழிநடத்தி அமைதி , அன்பு , அறிவு மூன்றையும் மக்களோடு பகிர்ந்து கொண்டு உன்னதமான வாழக்கையை வாழ்பவன் இறையருளை பெறுகிறான்

ஒரு மனிதனின் வாழ்க்கை தான் அந்த மனிதனின் தன்மையை எடுத்து காட்டுகிறது

உடல் அழிந்த பின்பு அவனுடைய நல்ல குணங்கள், அவன் செய்த நல்ல செயல்கள் என்றும் நம்மோடு நிலைத்து நிற்கின்றன

இவைதான் ஒரு மனிதனின் வாழக்கையை வரலாறாக மாற்றுகிறது

மனிதன் எத்தனை காலங்கள் வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை  அவன் எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம்  இதை அறிந்து வலமாக வாழக்கை வாழலாமில்லையா

“மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
இருப்பது எம் கடமை”

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s