சாபங்கள்

🌼சாபம் | சாப காரணங்கள்

🌼சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.:

  🌼பெண் சாபம் :
இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

  🌼பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலத் தாண்டுவதும்,  பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

  🌼பிரம்ம சாபம் :  நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

🌼சர்ப்ப சாபம்:
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும்., அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்..இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

  🌼பித்ரு சாபம்: 
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய  திதி மற்றும் தர்ம  காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும்  ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண்குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

. 🌼கோ சாபம் : 
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு  தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது  போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

🌼 பூமி சாபம் : 
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டுபண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.

  🌼 கங்கா சாபம்:
  பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும்,  ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

  🌼 விருட்ச சாபம்: 
பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், , மரத்தை எரிப்பதும்,  மரங்கள் சூழ்ந்த இடத்தை,  வீடு கட்டும் மனையாக்குவதும்   விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன்  மற்றும்  நோய் உண்டாகும்.

🌼தேவ சாபம்:
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை  இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள்  பிரிந்துவிடுவர்.

🌼 ரிஷி சாபம்: 
இது  கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும்  உண்மையான பக்தர்களையும்  அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

  🌼 முனி சாபம்: 
எல்லை தெய்வங்கள், மற்றும்  சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க  வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனிசாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

  🌼  குலதெய்வ சாபம் :
  இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

🌼சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.  தீயவர்களை  அழிக்கும். எவ்வளவு வரங்கள்  பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒருபோதும்  அழிக்க முடியாது.

🌼ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த  வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.🌼

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s