பெரியவாளும் காமாக்ஷியும்

image

நான் பெரியவா தரிசனத்துக்கு நவராத்திரி சமயம் சென்றிருந்தபோது ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்து பெரியவா பூஜையை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் பக்கம் நம் ஊர் பெண்மணி ஒருத்தரும், வெளி தேசத்தவரும் வந்து என்னிடம் ”நீங்கள் ஒரு ஒத்தாசை செய்வீர்களா ” எனக் கேட்டார்கள். வெளி நாட்டவரை சுட்டிக் காட்டி இந்தியப் பெண்மணி ”இவள் விஸா நாளையுடன்முடிகிறது. பெரியவா
தரிசனத்துக்காகவே வந்திருக்கா..உங்களால் இந்த உதவி பண்ணமுடியுமா?”

நான் அயல்தேசத்திலிருந்து நம் ஸ்வாமிகளைக் காண வந்திருக்கிறவாளின் விஸா முடிகிறது என்றால் நம்மால் ஆன ஒத்தாசை நிச்சயமா பண்ணணும் என்று பெரியவாலிடம் அழைதுச் சென்றேன்.
கிணற்றுக்கு அப்பாலிருந்து தரிசனம் தந்தார்கள்.

”என்ன வேணுமோ..கேட்கச் சொல்” என்றார்.

அந்தப் பெண்மணி ஒன்றுமே சொல்லாமல் பரமானந்தமாக தரிசனம் செய்து மெய்
புளகாங்கத்துடன் சென்றாள். பின் வெளியே வந்த பின் எனக்கு நன்றி சொல்லி ”எனக்கு
இந்திய கலாசாரத்தில் சிறு வயது முதல் நல்ல ஈடுபாடு. அதைப் பற்றி புஸ்தகங்கள் மூலம்
நிறைய தெரிந்து கொண்டேன். இங்குள்ள ரிஷிக்களின் மகத்துவத்தை அறிய எல்லா
இடங்களிலும் அலைந்தும் ஒன்று கூட  சரியாகக் கை கூடி வரவில்லை. மாட மாளிகை, ஆடம்பரம் உடைய இடங்களே நிறையப் பார்த்து மனசு அமைதி இல்லை. இந்த இடத்தைப் பற்றி ஒருவர் நேற்று  சொன்னதால் இங்கு ஓடி வந்தேன். நான் தேடிய அமைதி இங்குதான் கிடைத்தது. அதற்குமேல் சில நாட்களாக என் கனவில் ஓர் அழகு தேவதையின் தரிசனம் காண்கிறேன். அவள் யார் என்பதன் விளக்கமும் இங்கு கிடைத்து
விட்டது. இங்கு இருக்கும் ஸ்வாமிகள்தான் அந்த என் கனவில் வந்த தேவதை, என் ஜன்மத்துக்கு இது போதும் என்று அந்த முப்பது வயது நங்கை சொல்லிச் சென்றாள்.

இது பற்றித்தான் பெரியவா என்னிடம் மேற் சொன்னவாறு கேட்டார். நான் அவள் சொன்னதைச் சொன்னேன். அதற்கு மறு மொழி சொல்லாமல் திடீரென்று அங்கு
வந்திருந்த வேறொருத்தரிடம் ”மூக பஞ்சசதீ தெரியுமா உங்களுக்கு? அதில் ஆர்யசதகத்தில் குண்டலி குமாரிகுடிலே சண்டி சராசர ஸவித்ரி சாமுண்டே
குணினிகுஹாரிணி குஹ்யே குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி||

என விளக்கத்துடன் சொல்கிறார்.

பாலா, பரமேச்வரி, குண்டலினி, சண்டிகை, மாயை இவளே,அக்ஞானத்தை போக்குகிற குரு மூர்த்தியாகிற ..காமாக்ஷியை வணங்குகிறேன். என தாத்பர்யத்தை அவருக்கு விளக்குவது போல் தான் தான் காமாக்ஷி என்பதை எனக்குச் சொல்கிறார்.

பெரியவாளும் காமாக்ஷியும் ஒன்றேதான் நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்யாசம்!

ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி ஜயா த்ரிசுதே||

ஜய ஜய சங்கரா…..

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s