குலதொழில்

image

ஒரு கிராமத்தில் பெரியவாள் முகாம். பக்தர்கள் பல விதமான பழங்கள் ,தேங்காய், கற்கண்டு, உலர் பழங்கள், காய்கறிகள், புஷ்ப வகைகளை சமர்ப்பித்த வண்ணம் இருந்தனர்.

ஒரு க்யவன் சில மண் பாண்டங்களைக் கொண்டு வந்து பெரியவாள் முன்பாக வைத்து வணங்கி நின்றான்.

அவன் கொண்டு வந்த மண்சட்டி, பானை, சிறிய அகல் விளக்குகள் இவற்றைத் தடவிப் பார்த்து, குழந்தை போல் குதூஹலப் பட்டார்கள்.

”அருகில் இருந்த தொண்டரைப் பார்த்து, உனக்கு ருத்ரம் தெரியுமோ?”எனக் கேட்டார்கள்.

“தெரியும்”

”நாலாவது அனுவாகம் சொல்லு”

”நம: ஆவாத்தினீப்யோ…என சொல்லிக் கொண்டு போனார் தொண்டர்.

நடுவில் குலாலேப்ய: கர்மாரேப்யச்ச வோ நமோ நம: என்ற வாக்கியம் வந்ததும் நிறுத்தச் சொன்னார்கள்.

”குயவர்களாகவும், கருமார்களாவும் இருக்கும் பரமேசுவரரான தங்களுக்கு நமஸ்காரம் என்கிறது ஸ்ரீ ருத்ரம்!” என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார்கள்.

மண்பாண்டங்கள் கொண்டு வந்த குயவனுக்கு வேஷ்டி, புடவை கொடுக்கச் சொன்னார்கள்.

”மவனுக்குப் படிப்பு வரலீங்க சாமி”என முறையிட்டான் குயவன்.

”உனக்குப் படிக்க்த் தெரியுமா?”

”பையன் படித்தால் நல்லது, ட்யூஷன் வைத்தாவது படிப்புச் சொல்லிக் குடு, படிக்காவிட்டாலும் பரவாயில்லை; உன் குலத் தொழிலைக் கற்றுக் கொடு. உன்னை(படிப்பறிவில்லாத ஒரு தொழில் மட்டும் தெரிந்த) காப்பாற்றும் கடவுள் அவனையும் காப்பாற்றுவார்.”

குயவன் சந்தோஷமாகப் ப்ரசாதம் வாங்கிக் கொண்டு சென்றான்.

பெரியவாளின் சொற்களுக்கு அழிவு உண்டோ?

நம் கண்களால் எத்தனை பார்த்திருக்கிறோம்?

சொன்னவர் ஸ்ரீமடம் பாலு என்கிற ஸ்ரீஸ்வாமினாத இந்திர ஸரஸ்வதி அவர்கள்.
கோதண்ட ராம சர்மா தரிசன அனுபவங்கள்.

ஜய ஜய சங்கரா.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “குலதொழில்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s